தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா நாராயண்கேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிய சிண்டு என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்த உறவால் கணவர் தடையாக இருப்பதாக கருதிய கல்பனா, தனது காதலன் சிண்டுவுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு முத்தியம் ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அவரது உடலை அருகிலுள்ள மைதானத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி புதைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், எதுவும் நடக்காதது போல கணவர் காணாமல் போய்விட்டதாக கல்பனா போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் கல்பனாவின் கள்ளத்தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.
கடுமையான விசாரணைக்கு பிறகு, அவர் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர் காட்டிய இடத்தில் இருந்து முத்தியம் ரெட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து கல்பனா மற்றும் சிண்டு இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜேசிபி இயந்திரம் யார் கொண்டு வந்தது, இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: அடுத்த தேர்தலில் இது நிச்சயம் நடக்கும்.. பொடி வைத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..! என்ன மேட்டர்..?



