BREAKING | மாலையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..!! சவரனுக்கு ரூ.1,680 சரிந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!

gold rate

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும், ஒரு கிராம் ரூ.14,505-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மாதத்தின் தொடக்க நாளான இன்று காலையில் தங்கம் விலை சற்றே உயர்ந்து, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,15,080-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,385-க்கும் விற்பனையானது.


இருப்பினும், காலையில் லேசான விலை உயர்வை கண்ட ஆபரணத் தங்கத்தின் விலை, மாலை வர்த்தகத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடி சரிவை கண்டுள்ளது. அதன்படி, இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 மளமளவென குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.210 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000-க்கும் விற்பனையான நிலையில், மாலையில் மேலும் ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு மேலும் ரூ.5,000 சரிந்து ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More : விவசாயி வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் விஜய்..!! மூதாட்டிக்கு கூலிங் கிளாஸ் பரிசு..!! வைரல் வீடியோ

Next Post

நேபாள பெருவெள்ளம் எதிரொலி..!! முன்கூட்டியே உஷாரான சிக்கிம் அரசு..!! பனிப்பாறை ஏரிகளில் சென்சார்..!!

Tue Sep 1 , 2026
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகளில், தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 16 முக்கிய ஏரிகள் அடையாளம் காணப்பட்டு, அவை 24 மணி நேரமும் அதிநவீன முறையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சிக்கிம் மாநில நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வடக்கு சிக்கிமில் உள்ள 13 ஏரிகளிலும், மேற்கு சிக்கிமில் உள்ள 3 ஏரிகளிலும் நீர்மட்ட உயர்வு மற்றும் கொள்ளளவை கணக்கிட […]
Sikkim 2026

You May Like