KN நேரு வீட்டில் அதிரடி ரெய்டு..!! சிக்கியது என்ன..? சோதனைக்கு பின் அவரே கொடுத்த பரபரப்பு பேட்டி..!!

19480961 knnehru

டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக தன் மீதும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மைதான் என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.


திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.என் நேருவின் திருச்சி தில்லை நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 பேர் கொண்ட குழுவினர் வீடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நகராட்சி நிர்வாக அமைச்சராக நேரு இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் புகார் மற்றும் டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.

திருச்சி வீடு தவிர சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணாநகர், ஆர்ஏபுரம் உட்பட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். பார்ட்டி பண்ட் வசூலித்து சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியது தொடர்பாக புகாரிலும், நேருவின் தம்பி ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து பேசிய அவர், “அரசியல் ரீதியாக எங்களை மிரட்டி வைக்கலாம் என்ற நோக்கிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், வரவு செலவு சம்பந்தப்பட்ட ஒரு சிறிய துண்டு சீட்டையும், ஒரு பைலையும் மட்டுமே எடுத்துச் சென்றுள்ளார்கள். நான் எந்த டெண்டர் விவகாரம் தொடர்பாகவும் ஒப்பந்ததாரர்களிடம் பேசியதே இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், தனது வீட்டில் வருமான வரி அல்லது புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடைபெறுவது இது மூன்றாவது முறை என்று குறிப்பிட்ட அவர், “சோதனை தொடங்கியதும் எங்களது கட்சி தலைவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அறிவுறுத்தினார். தலைவரின் வழிகாட்டுதலின்படி நாங்கள் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம்” என்று கூறினார்.

Read More : காதலியை பார்க்க வீட்டுக்கு வந்த காதலன்..! கொதிக்க கொதிக்க எண்ணெய்..! நள்ளிரவில் தாய் செய்த கொடூரம்..!

Next Post

சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த காதலன்..!! 20 நாட்களாக காதலிக்கு போன மெசேஜ்..!! திடுக்கிட வைக்கும் படுகொலை சம்பவம்..!!

Sat Sep 5 , 2026
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஆலோக் குப்தா (27), கடன் பிரச்சனை காரணமாக தனது சொந்த நண்பர்களாலேயே அடித்து படுகொலை செய்யப்பட்டு, மத்திய பிரதேச வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் தொழில்முறை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த ஆலோக் குப்தா, கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திடீரென மாயமானார். மகனைக் காணாமல் […]
suicide crime

You May Like