அமெரிக்க தூதர்களின் அதிரடி என்ட்ரி!. 4.5 ஆண்டுகால போருக்கு விடிவுகாலம்?. புடின் போட்ட உத்தரவு!

putin trump zelensky

உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதல்களை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.


உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோ சென்றுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் வருகையை முன்னிட்டு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்வைத்த தற்காலிக போர்நிறுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியதாவது, அமெரிக்க தூதர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல ஏதுவாக எங்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான வான்வழித் தாக்குதல்களும் நடத்தப்படாது” என்று செலென்ஸ்கி உறுதி அளித்துள்ளார். மேலும், “நாங்கள் பாதுகாப்பது அமெரிக்க தூதர்களைத்தானே தவிர ரஷ்யாவை அல்ல. அமெரிக்கப் பிரதிநிதிகளின் இந்த வருகை மற்றும் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற ரஷ்யாவும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். 4.5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போருக்கு உண்மையான மற்றும் நிலையான தீர்வுகளைக் காண்பதே தங்கள் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபரைச் சந்தித்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் சென்று அதிபர் ஜெலென்ஸ்கியையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க பிரதிநிதிகள் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் உக்ரைன் உளவுத்துறை தலைமையகத்தின் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

இந்த 6 இடங்களில் மட்டும் வாயை திறக்காதீங்க.. சாணக்கியர் சொன்ன வாழ்க்கைப் பாடம்!

Sun Sep 6 , 2026
எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்திருப்பதே புத்திசாலித்தனம். வாழ்க்கையில் சில சூழ்நிலைகளில் நம்முடைய கருத்தை வெளிப்படுத்துவது பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலை உருவாக்கிவிடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது என்ற கருத்தை சாணக்கியரின் நீதிகள் வலியுறுத்துகின்றன. அரசியல், நிர்வாகம் மற்றும் மனித இயல்பு குறித்து ஆழமாக சிந்தித்த சாணக்கியரின் கருத்துகள், “சாணக்கிய நீதி” என்ற பெயரில் இன்றும் பரவலாக பேசப்படுகின்றன. […]
chankaya 1

You May Like