குட் நியூஸ்..! கேஸ் சிலிண்டருக்கு இனி 45 நாட்கள் காத்திருக்க தேவையில்லை..! மத்திய அரசு தளர்வு அறிவிப்பு..!

Gas 2025

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, கிராமப்புறங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற நுகர்வோரைப் போலவே கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை புதிய சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.


சர்வதேச அளவில் நிலவிய பதற்றம் மற்றும் ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் சூழலால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் காரணமாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு உருவானது. இதனால் உள்நாட்டு எல்பிஜி விநியோகத்தை சீராக்கும் நோக்கில், மத்திய அரசு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அப்போது நகர்ப்புற நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் முன்பதிவு இடைவெளியாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த குறிப்பிட்ட நாட்கள் முடியும் வரை அடுத்த கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது. தற்போது சமையல் எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பி சீரடைந்துள்ளதாலும், சிலிண்டர் முன்பதிவு நிலுவைகள் பெருமளவில் குறைந்துள்ளதாலும் இந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. நாடு முழுவதும் கிராமம் மற்றும் நகரம் என்ற பாகுபாடின்றி அனைத்து வீட்டு உபயோக எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கும் இந்த 25 நாள் முன்பதிவு நடைமுறையை உடனடியாக அமல்படுத்துமாறு இந்தியன் ஆயில் (IOCL), பாரத் பெட்ரோலியம் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) ஆகிய அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Read More : சத்தம் போட்டு பேசினால் அனைத்தும் உண்மையாகி விடுமா? திமுகவுக்கு பயந்து சபாநாயகரே..!! எம்பி கனிமொழி கடும் தாக்கு..!!

Next Post

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலேயே வழிபடுவது எப்படி..? என்னென்ன படைத்து பூஜை செய்யலாம்..?

Tue Sep 8 , 2026
இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானின் அவதார திருநாளான விநாயகர் சதுர்த்தி விழா, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தடைகளை தகர்த்து புதிய காரியங்களை வெற்றியாக்கும் கடவுளாகப் போற்றப்படும் விநாயகருக்கு நடத்தப்படும் இந்த விழா, இந்தியா முழுவதும் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் ‘விநாயகர் உத்சவத்தின்’ தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்து பஞ்சாங்கத்தின்படி, ஆவணி/புரட்டாசி மாதத்தில் வரும் ‘பத்ரபத’ சுக்ல […]
Vinayagar 2025

You May Like