“அண்ணி மீது ஆசை”.. அண்ணன் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவம்! ஆத்திரத்தில் தம்பி செய்த கொடூரம்!

ac7769890f9fafe00a6a420007a309338594a83056c3e03ac67023df588b9dde

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. அண்ணன் பிண்டுவை கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது தம்பி ராஜேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிண்டு (35), தனது மனைவி பிரபாவதி (30), நான்கு குழந்தைகள் மற்றும் தம்பி ராஜேஷ் (20) ஆகியோருடன் தேன்கனிக்கோட்டை அருகே ஜார்க்கலட்டி கிராமத்தில் உள்ள பூந்தோட்டத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், பிண்டு வெளியூருக்குச் சென்றிருந்தபோது அவரது மனைவி பிரபாவதிக்கும் ராஜேஷுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்துள்ளது. சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு பிண்டு மீண்டும் ஜார்க்கலட்டிக்கு திரும்பியுள்ளார்.

அன்று நள்ளிரவில் பிண்டுவுக்கும் ராஜேஷுக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜேஷ், கத்தியால் பிண்டுவின் மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் பலமுறை குத்தியுள்ளார்.

கத்திக்குத்தில் காயமடைந்த பிண்டு, மருத்துவமனைக்குச் செல்லாமல் தானாகவே மருந்து போட்டுக்கொண்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் அசைவின்றி கிடந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிண்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் பிண்டுவின் தம்பி ராஜேஷை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: எண்ணெய் கப்பல்களை குறிவைத்த அமெரிக்கா… பதிலடியில் இறங்கிய ஈரான்! வளைகுடாவில் மீண்டும் போர் பதற்றம்…

Saranya

Next Post

“இன்னும் 4 ஆண்டுகள்தான்”.. AI குறித்து எச்சரித்து திடீரென ராஜினாமா செய்த ஆய்வாளர்! 2030ல் என்ன நடக்கும்?

Wed Sep 9 , 2026
“இன்னும் 4 ஆண்டுகள்தான்?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, AI துறையில் பணியாற்றியவர்களே அதன் அதிவேக வளர்ச்சி குறித்து வெளிப்படையாக கவலை தெரிவிப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. AI பாதுகாப்பு துறையில் பணியாற்றிய Anthropic நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேக்கப் காக்ஸன் (Jacob Coxon), நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியதுடன், AI வளர்ச்சியின் தற்போதைய போக்கு குறித்து கடுமையான எச்சரிக்கையையும் […]
d39a1aa7f0eecc82e7044bde7e50aa4753595cc0d63c87a2339742acd5adaeb8

You May Like