TN New Secretariat | 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம்..!! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

Chennai Secretariat 2025

TN New Secretariat | சென்னை பட்டினப்பாக்கம் அருகே புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தலைமை செயலக பொதுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி, ரூ.1,200 கோடியில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமை செயலக கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட திட்டத்தை தடையின்றி செயல்படுத்தும் வகையில் 3 தனித்தனி குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டட கலை நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை குழு, கட்டட வடிவமைப்பு குழு மற்றும் வரைபடம் தயாரிக்கும் குழு ஆகிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. மேலும், இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) பொதுப்பணித்துறை உடனடியாக தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசின் பொதுத்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ஆதாரம் ரெடியா இருக்கு.. இனி ஆக்‌ஷன் தான்..!! யாரையும் சும்மா விட மாட்டோம்..!! அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை..!!

You May Like