ஏஐ வீடியோ என நினைத்த விஞ்ஞானிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! காணாமல்போன தீவு மீண்டும் தென்பட்ட அதிசயம்..!! எப்படி சாத்தியமானது?

Canada 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வில்லிஸ்டன் நீர்த்தேக்கத்தில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அடர்ந்த மரங்கள் சூழ்ந்த விநோத தீவு ஒன்று, செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து திடீரென மாயமாகி தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


சுமார் 9,800 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, தோராயமாக ஒன்றரை அமெரிக்கக் கால்பந்து மைதானங்களின் அளவுக்கு இணையானதாகும். கடந்த ஜூலை மாத இறுதியில் படகோட்டிகளால் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானபோது, இது ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோவாக இருக்கலாம் என்றே பலரும் கருதினர். ஆனால், ஜூலை 21-ஆம் தேதியிட்ட செயற்கைக்கோள் படத்தை அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ‘பிசி ஹைட்ரோ’ நிறுவனம் ஆய்வு செய்தபோது, அந்தத் தீவு நன்னீர் நீர்த்தேக்கத்தின் நடுவே உண்மையிலேயே மிதந்து கொண்டிருப்பது உறுதியானது.

எனினும், அடுத்த சில வாரங்களிலேயே அதாவது ஆகஸ்ட் 5 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் அந்தத் தீவு இருந்த இடத்திலிருந்து முழுமையாக மாயமானது பெரும் புதிரை உருவாக்கியது. இந்நிலையில், தற்போது அந்த மர்மத்திற்கு விடை கிடைத்துள்ளது. அந்தத் தீவு தண்ணீரில் மூழ்கிவிடாமல், காற்று மற்றும் நீரோட்டத்தின் காரணமாக சுமார் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு நகர்ந்து சென்று கரையின் மற்றொரு பகுதியை அடைந்திருப்பது புதிய செயற்கைக்கோள் படங்கள் மற்றும் விமானிகளின் சாட்சியங்கள் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது.

பல ஆண்டுகளாக நீரில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் மற்றும் மிதக்கும் தாவரக் கழிவுகள் ஒன்றுகூடி, அவற்றின் மீது மரங்களும் தாவரங்களும் வேரூன்றி வளர்ந்ததால் இந்த மிதக்கும் நிலப்பரப்பு உருவாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இந்த ஆண்டு கோடைகாலத்தில் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்ததால் இது கரையிலிருந்து உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாண சிப்பவா ஏரியிலும் ‘போர்ட்டி ஏக்கர் பாக்’ என்ற இதேபோன்ற மிதக்கும் சதுப்பு நிலத் தீவு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இந்தத் தீவு நிலையான தரைப்பகுதி அல்ல என்பதால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், சாகச ஆர்வலர்கள் யாரும் இதில் இறங்கவோ, அருகில் செல்லவோ முயற்சி செய்யக்கூடாது என்றும் கனடா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Read More : இனி விசில் சின்னம் நிரந்தரம்..!! தவெக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிப்பு..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Next Post

ஷஃபாலி வர்மா அதிரடி, தீப்தி மிரட்டல் பந்துவீச்சு!. வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தல்!. இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி!

Fri Sep 11 , 2026
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026-ன் முதல் அரையிறுதிப் போட்டியில், வங்கதேச அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 64 ரன்கள் […]
Asia Cup 2026 final india 30kb

You May Like