தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தை மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பிரதான அடையாளமாக விளங்கும் ‘விசில்’ சின்னம் தவெக-வுக்கே நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக, யாரும் எதிர்பாராத வகையில் 35 சதவீத வாக்குகளை வாரிக் குவித்து அசத்தியது. சுமார் 1.8 கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகளைப் பெற்று வரலாறு படைத்த அக்கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய தோழமைக் கட்சிகளின் வலுவான ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சியை வழிநடத்தி வருகிறார்.
ஒரு அரசியல் கட்சி மாநில அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு தேவையான அனைத்து தேர்தல் விதிமுறைகளையும் வாக்கு சதவீத அடிப்படையிலும் சட்டமன்ற பலத்தின் மூலமும் தவெக வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இதனடிப்படையில் இன்று (செப்டம்பர் 10) தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த புதிய அங்கீகாரத்தின் மூலம், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் எதிர்கால தேர்தல்களில் தவெக வேட்பாளர்கள் தங்களது அதிகாரப்பூர்வ ‘விசில்’ சின்னத்திலேயே எவ்வித தடையுமின்றி களமிறங்குவது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி அறிவிப்பு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : விஜய் – ஸ்டாலின் மோதல் தீவிரம்.. தாடை சைகைக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்! மீண்டும் பரபரக்கும் தமிழக அரசியல்..



