கழிவுப் பொருளில் இருந்து ஏழை குழந்தைகளுக்கு செருப்பு!. சென்னை மாணவனின் அசத்தல் ஐடியா!.

Chennai scl student make slippers 30kb

நம்மில் பலர் பல ஜோடி காலணிகளை வைத்திருந்தாலும், கடுமையான வெயிலில் வெறும் கால்களுடன் சாலையில் ஓடும் குழந்தைகளையும், தேய்ந்துபோன செருப்புகளுடன் நடப்பவர்களையும் தினமும் காண்கிறோம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவரான அர்ஹன் ரெட்டி (Arhan Reddy), தனது கவனத்திற்கு வந்த இந்த எளிய மக்களின் துயரத்தை ஒரு பெரிய மாற்றமாக மாற்றிக் காட்டியுள்ளார். தொழிற்சாலைகளில் வீணாகும் ‘ஈவா’ (EVA) எனப்படும் ரப்பர் கழிவுகளை மறுசுழற்சி செய்து, ஏழை எளிய குழந்தைகளுக்குச் செருப்புகளை வழங்கி வருகிறார் இந்தச் சென்னை மாணவர்.


ஃபரிதா குரூப் (Farida Group) நிறுவனத்தைச் சேர்ந்த இர்ஷாத் அகமது மெக்காவுடன் ஏற்பட்ட உரையாடலின் போதுதான் அர்ஹானுக்கு இந்த யோசனை தோன்றியுள்ளது. ஆம்பூரில் உள்ள அவர்களது செருப்பு தொழிற்சாலையில் அதிகளவில் வெளியேறும் ஈவா (Ethylene Vinyl Acetate) கழிவுகளை மறுபயன்படுத்துவது குறித்து அவர் விவாதித்துள்ளார். செப்டம்பர் 2025-ல் தொழிற்சாலைக்குச் சென்று செருப்பு தயாரிக்கும் முறைகளையும், கழிவுகள் எவ்வாறு தூளாக்கப்பட்டு துகள்களாக மாற்றப்படுகின்றன என்பதையும் அர்ஹன் நேரில் கற்றறிந்தார்.

தொழிற்சாலைப் பயணம் ஒருபுறமிருக்க, சென்னை வீதிகளில் வெறும் கால்களுடன் செல்லும் குழந்தைகளைப் பார்த்தபோது இந்தத் திட்டத்திற்கு ஒரு சமூக நோக்கம் கிடைத்தது. மறுசுழற்சி செய்யப்பட்ட ஈவா பொருட்களைக் கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் செருப்புகளைத் தயாரித்து வழங்குவதே ‘எகோஸ்டெப்ஸ்’ (EcoSteps) திட்டத்தின் இலக்காக மாறியது. இதற்கான முயற்சிகளில் ஃபரிதா குரூப் நிறுவனத்தின் ஆர்மாண் மெக்காவும் அர்ஹானுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இந்தத் திட்டம் நிஜமாக மாற ஒரு வருட கால உழைப்பு தேவைப்பட்டுள்ளது. தொழிற்சாலைப் பயணங்கள், பரிசோதனைகள் எனப் பல கட்டங்களைக் கடந்து, மறுசுழற்சி செய்யப்பட்ட ஈவா பொருளின் அளவை 19 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்த அர்ஹன் உதவினார். சமையல் குறிப்பைப் போல, மூலப்பொருட்களின் அளவைக் கூட்டுவதும் குறைப்பதும் செருப்பின் மென்மை, கடினத்தன்மை மற்றும் விலையை நிர்ணயிக்கும் என்பதால், பல சோதனைகளுக்குப் பிறகு சரியான கலவை கண்டறியப்பட்டது.

சென்னையில் உள்ள இரண்டு மூன்று காப்பகங்களுக்குச் சென்ற அர்ஹன், சுமார் 750 குழந்தைகளின் கால் அளவுகளைத் திரட்டினார். மேலும், 100 குழந்தைகளிடம் அவர்களது விருப்பமான செருப்பு வடிவமைப்பு குறித்துக் கேட்டறிந்தார். சில குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த வடிவமைப்புகளையும் வரைந்து காட்டினர். தற்போது இதன் மூலம் 2,000 ஜோடி செருப்புகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காப்பகங்களுக்கு வாரத்திற்கு 200 ஜோடிகள் வீதம் விநியோகிக்க அர்ஹன் திட்டமிட்டுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இந்தத் திட்டத்தைத் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். அமைச்சருக்கு முதல் ஜோடி செருப்பு பரிசாக வழங்கப்பட்டது. இந்தச் சந்திப்பு எகோஸ்டெப்ஸ் திட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ஆதரவற்ற குழந்தைகள் மட்டுமின்றி, சுமார் 10 லட்சம் ஏழை எளிய மக்களுக்கும் இந்தச் செருப்புகளை விநியோகிக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்த யோசனையை ஏற்று, அரசு மற்றும் என்ஜிஓ அமைப்புகளின் உதவியுடன் திட்டத்தை விரிவுபடுத்த அர்ஹன் திட்டமிட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

'80ஸ் ரெட்ரோ' டிரெண்டில் இணைந்த லெஜண்ட் சரவணன்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

Sat Sep 12 , 2026
சமூக வலைதளங்களில் தற்போது 1980களின் ரெட்ரோ தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட AI புகைப்பட டிரெண்ட் வேகமாக வைரலாகி வருகிறது. பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல் மற்றும் விண்டேஜ் புகைப்படங்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பலரும் தங்களது புகைப்படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த டிரெண்டில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லெஜண்ட் சரவணனும் தற்போது 80ஸ் ரெட்ரோ […]
legent saravana

You May Like