சமூக வலைதளங்களில் தற்போது 1980களின் ரெட்ரோ தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட AI புகைப்பட டிரெண்ட் வேகமாக வைரலாகி வருகிறது. பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல் மற்றும் விண்டேஜ் புகைப்படங்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பலரும் தங்களது புகைப்படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த டிரெண்டில் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் லெஜண்ட் சரவணனும் தற்போது 80ஸ் ரெட்ரோ போட்டோ டிரெண்டில் இணைந்துள்ளார். லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைதள பக்கத்தில் ரெட்ரோ தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 1980களின் காலகட்டத்தை நினைவூட்டும் வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளதால், அவை ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
தற்போது சமூக வலைதளங்களில் 80ஸ் ரெட்ரோ புகைப்பட டிரெண்ட் தொடர்ந்து பிரபலமடைந்து வரும் நிலையில், லெஜண்ட் சரவணனின் இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.



