வீட்டில் விநாயகர் சிலை வைக்கப் போறீங்களா? எந்த நேரத்தில் பூஜை செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்?

Vinayagar 2025

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருநாளில், முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை இல்லங்களில் பிரதிஷ்டை செய்து முறைப்படி விரதமிருந்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பது ஐதீகம். இன்றைய தினம் இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட உகந்த நாளாகும். இதற்கான சுப முகூர்த்த நேரங்கள்:


கலச ஸ்தாபனம்:

செப்டம்பர் 13 (ஞாயிறு) காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

கணபதி ஹோமம் செய்ய உகந்த நேரம் (செப். 14):

அதிகாலை 4.30 – 6.00 மணி

காலை 6.00 – 7.30 மணி

காலை 9.00 – 10.30 மணி

விநாயகர் பிரதிஷ்டை மற்றும் பூஜை செய்ய உகந்த நேரங்கள் (செப். 14):

அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

பிற்பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

அருகிலுள்ள ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்வதும், கணபதி ஹோமத்திற்கு காய்ந்த கொப்பரை தேங்காய் மற்றும் சத்துமாவு காணிக்கையாக வழங்குவதும் அளப்பரிய புண்ணியத்தையும் நற்பலன்களையும் தரும்.

Read More : பிரபல ரவுடியை துடிதுடிக்க வெட்டி சாய்த்த கும்பல்..!! குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்..!! சென்னையில் பயங்கரம்..!!

Next Post

விநாயகருக்கு 'கணபதி' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா..? இன்று எப்படி வழிபட வேண்டும்..?

Mon Sep 14 , 2026
‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்’ அல்லது ‘மேலான தலைவர்’ என்பது பொருளாகும். எந்தவொரு சுப காரியத்தையும் தடையின்றி முடித்துக் கொடுக்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த நன்னாளே ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் ‘விநாயகர் சதுர்த்தி’யாக நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புராணங்களின்படி, பார்வதி தேவி நீராடச் செல்லும் போது தன் மேனி சந்தனப் பூச்சுகளால் ஒரு பாலகனை உருவாக்கி, அதற்கு உயிரூட்டிக் காவலுக்கு […]
Vinayagar 2025

You May Like