வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் கடும் போட்டிகளுக்கு மத்தியில், படித்த இளைஞர்கள் வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடாமல் தங்களது சொந்த ஊர் அல்லது கிராமங்களிலேயே குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் ஈட்டக்கூடிய அருமையான சுயதொழில் வாய்ப்பாக ‘RO குடிநீர் சுத்திகரிப்பு ஆலை’ (Commercial RO Water Plant) உருவெடுத்துள்ளது.
நிலத்தடி நீரில் உள்ள அதிகப்படியான உப்பின் அளவு (TDS) காரணமாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டு விசேஷங்கள், சுபநிகழ்ச்சிகள், பள்ளிகள், உணவகங்கள் மற்றும் உள்ளூர் கடைகளில் 20 லிட்டர் தண்ணீர் கேன்களுக்கு ஆண்டு முழுவதும் நிலையான சந்தை நிலவுகிறது.
தொழில் கட்டமைப்பு மற்றும் முதலீட்டு விவரம்:
தேவையான இடம்: 200 முதல் 300 சதுர அடி இடம் போதுமானது.
இயந்திரக் கட்டமைப்பு: மணிக்கு 1,000 லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட வணிக RO யூனிட் நிறுவ தோராயமாக ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
இதர உபகரணங்கள்: ஆரம்பக் கட்டத்தில் 100 முதல் 200 எண்ணிக்கையிலான காலி கேன்கள் மற்றும் விநியோகத்திற்குப் பழைய 3 சக்கர வாகனம் அல்லது இ-ரிக்ஷா பயன்படுத்தலாம்.
செலவு மற்றும் லாபக் கணக்கீடு:
ஒரு 20 லிட்டர் கேனைச் சுத்திகரித்து நிரப்ப ரூ.3 முதல் ரூ.5 மட்டுமே செலவாகிறது. இதனை சந்தை நிலவரப்படி ரூ.25 முதல் ரூ.40 வரை எளிதாக விற்க முடியும்.
ஒரு கேன் தயாரிப்புச் செலவு – ரூ.3 – ரூ.5
விற்பனை விலை (சராசரி) – ரூ.30
தினசரி விற்பனை இலக்கு – 100 கேன்கள்
தினசரி மொத்த விற்பனை – ரூ.3,000
இதர செலவுகள் (மின்சாரம், டீசல்/சார்ஜ்) – ரூ.1,000
தினசரி நிகர லாபம் – ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை
மாதாந்திர உத்தேச வருமானம் – ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை
சரியான TDS அளவைப் பராமரித்து, தரமான குடிநீரையும் நேரடி விநியோகத்தையும் வாடிக்கையாளர்களுக்குத் தவறாமல் வழங்கினால், வாடிக்கையாளர் வட்டத்தை எளிதாகத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆரம்பத்தில் உள்ளூர் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்குச் சிறிய சலுகைகள் வழங்கி சந்தையைப் பிடித்துவிட்டால், கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் இத்தொழில் மூலமாகத் தடையற்ற நிலையான லாபத்தை ஈட்ட முடியும்.
Read More : 90s கிட்ஸ் கையில் தவழ்ந்த Nokia, BlackBerry..!! இந்த நிறுவனங்கள் இப்போ என்ன பண்றாங்க தெரியுமா..?



