POCSO வழக்கில் கைதான 49 வயது ஆசிரியர்.. SP அலுவலக 3-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு!

suicide NCRB report

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 49 வயது உடற்கல்வி ஆசிரியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விஜயநகரா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், சன்னப்பட்டணா தாலுகாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அந்தப் பள்ளியில் பயிலும் பல குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சனிக்கிழமை மாலை அவரை கைது செய்தனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்புச் சட்டமான POCSO சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடித்த பின்னர், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக அந்த ஆசிரியரை ஞாயிற்றுக்கிழமை ராமநகரில் உள்ள பெங்களூரு தெற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அங்கு கட்டிடத்தின் 3-வது மாடியில் செயல்படும் Measurement Collection Unit-ல் அவரது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவரை மீண்டும் போலீஸ் வாகனத்துக்கு அழைத்துச் சென்றபோது, உடன் வந்த காவலரை தள்ளிவிட்டு அவர் திடீரென தடுப்புச்சுவர் நோக்கி ஓடி, 3-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், காவலரை தள்ளிவிட்டு வேகமாக ஓடிய அந்த நபர் கட்டிடத்தின் தடுப்பைத் தாண்டி கீழே குதிப்பது பதிவாகியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவரை போலீசார் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கோர விபத்து.. பாலத்தின் சுவரை உடைத்து கீழே பாய்ந்த BMW; 3 கல்லூரி மாணவர்கள் பலி!

Saranya

Next Post

அக்டோபர் 15 முதல் புதிய UPI கட்டணம்.. மீண்டும் Cash, ATM பக்கம் திரும்பும் பொதுமக்கள்!

Mon Sep 21 , 2026
UPI பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண நடைமுறை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், நாடு முழுவதும் சில பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஏற்கும் நடைமுறையில் மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. ₹2,000-க்கு மேற்பட்ட சில UPI merchant பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15 முதல் 0.4 சதவீத Merchant Discount Rate (MDR) அமலாகிறது. இந்தக் கட்டணத்தை வணிகர்கள் செலுத்த வேண்டும்; வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணமாக […]
atm card

You May Like