“என்கூட உன்னால பேச முடியாதா?”.. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!

ce84984212469cff57ddca970d09d6f554701b747662d18250c0576e70eae301

கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணை பழிவாங்கும் நோக்கில், அவரது வீட்டுக்குச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 34 வயது மோகனா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகனா, கணவர் மாணிக்கம் மற்றும் இரண்டாவது மகளுடன் வசித்து வந்தார். அவர்களது மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியான பாபுலாலுடன் மோகனாவுக்கு கடந்த 6 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. சுமார் 3 மாதங்களுக்கு முன்பு இந்த கள்ளக்காதலை மோகனா முடித்துக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவர் வேறு ஒருவருடன் பழகியதும் பாபுலாலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மோகனாவின் கணவர் வயிற்று வலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக மோகனா மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு பாபுலாலும் அவரை சந்தித்து பேச முயன்றுள்ளார். ஆனால், மோகனா அவருடன் பேச மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மதுபோதையில் இருந்த பாபுலால், அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்துக்குச் சென்று ஒரு லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கியுள்ளார். பின்னர் மோகனா வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது அங்கு சென்ற அவர், பின்புறமாக வந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திடீரென உடலில் தீப்பற்றியதால் மோகனா அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டனர். பலத்த தீக்காயங்களுடன் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுலாலை தேடி வந்தனர். நந்தியம்பாக்கத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், பாபுலால் மீது ஏற்கனவே எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றிய கார்.. வெளியேற முடியாமல் உயிரிழந்த நரம்பியல் மருத்துவர்!

Saranya

Next Post

“எங்களை விட்டுடுங்க...” நடுரோட்டில் கதறிய சிறுமி!. பீகார் கும்பல் அராஜகத்தின் கொடூரம்!. பதறவைக்கும் காட்சி!

Mon Sep 21 , 2026
பீகாரில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, இரவு நேரத்தில் நடந்து சென்ற சிறுவன் மற்றும் சிறுமியைச் சூழ்ந்து கொண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ, ஜமுய் (Jamui) மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோவில், இருவரையும் பல ஆண்கள் சூழ்ந்து கொண்டு அச்சுறுத்துவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில், அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் […]
Bihar Girl Boy Attack 30kb

You May Like