புயல் மழை வருது… 2018-லேயே பழுதான IMD ரேடார்!. பெருவெள்ள அபாயத்தில் சென்னை!. அச்சத்தில் மக்கள்!

imd radar 30kb

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை வானிலை மையத்தின் ரேடார் பழுதாகி செயல்படாமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக தட்ப வெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டு உஷார்படுத்தி உள்ளனர்.கடும் வெப்பம், வறட்சி, பெரு வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரையில் பருவமழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாகவே இருக்கும். இந்த பாதிப்பு வரலாறு காணாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது சூப்பர் எல் நினோவால் பெரு வெள்ளம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருப்பது பொதுமக்களிடையே சற்று பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும், இந்த ஆண்​டு, அடுத்த மாதம் 3 அல்​லது 4-வது வாரத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், வடகிழக்கு பரு​வ​மழை முன்​னேற்​பாடு​கள் குறித்து அமைச்​சர்​கள், துறை செயலர்​கள் மற்​றும் அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​கள், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஆகியோ​ருடன் முதல்​வர் விஜய் தலை​மை செயல​கத்​தில் நேற்று ஆலோ​சனை நடத்தினார்.

இந்தநிலையில், சென்னை துறைமுக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் பழுதாகி செயல்படாமல் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2018ம் ஆண்டு பழுதான இந்த ரேடாருக்கு, உரிய உதிரி பாகங்கள் கிடைக்காமல் இருப்பதால், பழுது நீக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில், வானிலையின் முழுமையான செயல்பாட்டை அறிய முடியாத நிலையில் வானிலை மையம் உள்ளது. இது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

தீபாவளி ஷாப்பிங்கிற்கு ரெடியா?. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் சலுகை அக்.8 முதல் தொடக்கம்!. டாப் ஆஃபர்கள் இதோ!

Tue Sep 22 , 2026
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 விற்பனை அக்டோபர் 8-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், ஆடை வடிவமைப்புப் பொருட்கள், அழகுச் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் பெருமளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன. எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடித் தள்ளுபடி வழங்கப்படும். தகுதிவாய்ந்த எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் […]
Amazon Great Indian Festival 2026 30kb

You May Like