அகர்கருக்கு பதில் யார்?. புதிய தேர்வுக் குழு தலைவர் குறித்து பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்!

Ajit Agarkar 30kb

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக தனது மூன்றாண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று அஜித் அகர்கர் கடந்த செப்டம்பர் 18-ம் தேதியன்று பிசிசிஐ-யிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நிறைவடையும் அக்டோபர் 4-ம் தேதிக்கு பின்னரே, புதிய தலைமைத் தேர்வாளர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார்.


இது குறித்து புதன்கிழமை கவுகாத்தியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சைகியா, “அஜித் அகர்கரை பொறுத்தவரை, அவரது பதவிக்காலம் அக்டோபர் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. அக்டோபர் 4 வரை எங்களுக்கு போதுமான நேரம் உள்ளது. அதன் பிறகு காலியாகவுள்ள அந்தப் பதவி குறித்து நாங்கள் தகுந்த முடிவு எடுக்க உள்ளோம். பிசிசிஐ எந்த முடிவை எடுத்தாலும், அது உடனடியாக பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் அணியைப் போலவே ஆடவர் அணியும் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கத்துடன் தாயகம் திரும்புவார்கள் என்று நம்புவதாகவும் சைகியா தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்:

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்து பேசிய அவர், “மகளிர் அணியின் சிறப்பான வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது; அதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். மகளிர் அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் ஓராண்டுக்கும் மேலாக தங்கள் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆடவர் அணியைப் பொறுத்தவரை, போட்டிகள் 28-ம் தேதி தொடங்குகின்றன, இறுதிப் போட்டி அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும். ஜப்பானில் மகளிர் அணி அமைத்துக் கொடுத்த அதே வெற்றிப் பாதையை ஆடவர் அணியும் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். அக்டோபர் 3-ம் தேதியன்று நாடு மீண்டும் ஒரு தங்கப் பதக்கத்தை கொண்டாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

1newsnationuser5

Next Post

ஆசிய விளையாட்டு; பேட்மிண்டனில் வெண்கலம் வென்றது இந்தியா!. தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை!.

Thu Sep 24 , 2026
ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் பேட்மிண்டன் பிரிவில், இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. சீனாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தொடரில் இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது. இப்போட்டியின் 4-வது ஆட்டமாக நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன் – ஹரிஹரன் ஜோடி, சீனாவின் […]
Asian Games Tamil Nadu player Hariharan 30kb

You May Like