Breaking : அன்னூர் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து..! கரும்புகையால் பொதுமக்கள் கடும் அவதி..!

fire

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சலால் அவதியடைந்தனர்.


கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதிமலை சாலையில் குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திடீரென தீப்பற்றியது. குப்பைகள் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியதால், சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் அடர்த்தியான கரும்புகை பரவியது. குறிப்பாக குப்பைகளில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்ததால், அதிலிருந்து நச்சுப்புகை அதிகளவில் வெளியேறியது.

குப்பை கிடங்கிலிருந்து வெளியான கரும்புகையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சிலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அன்னூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பை மேட்டின் மேற்பரப்பில் மட்டுமின்றி, அதன் உட்பகுதியிலும் தீ பரவி எரிந்து வருவதால் தீயை முழுமையாக கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதனிடையே, குப்பை கிடங்கில் அடிக்கடி இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read:கபடி… கபடி… ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்!.

Newsnation_Admin

Next Post

கூட்டுறவு அமைப்புகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே முக்கிய நோக்கம் - அமித்ஷா..!

Sat Sep 26 , 2026
திருவனந்தபுரம்: கூட்டுறவு அமைப்புகள் மூலமாக பெண்களுக்கு அதிகாரமளிப்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொண்டு, பல்வேறு கூட்டுறவு சங்க திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியபோது பல்வேறு தகவல்களை தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு […]
amithshan tn bjp

You May Like