ஆசிய விளையாட்டு!. தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அபாரம்!. வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்று அசத்தல்!.

vithya ramaraj 30kb

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஈஷா சிங் 38 புள்ளிகளுடன் சீனாவின் சியாவோ ஜியாருசுவானுடன் சமநிலையில் இருந்தார். இதையடுத்து தங்கப் பதக்கத்தை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடைபெற்றது.


தங்கத்துக்கான ஷூட்-ஆஃப் போட்டியில் சீன வீராங்கனை சியாவோ ஜியாருசுவான் வெற்றி பெற்றார். இதனால் ஈஷா சிங்கிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வடகொரியாவின் கிம் ஹியோன் சுக் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இறுதிப்போட்டிக்கு ஈஷா சிங் 580-22x என்ற புள்ளிகளுடன் 8-வது இடத்தில் தகுதி பெற்றிருந்தார். போட்டியின் ஒரு கட்டத்தில் பதக்க வாய்ப்பிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த அவர், அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் முன்னேறினார்.

பின்னர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் வடகொரியாவின் கிம் ஹியோன் சுக்குடன் பல்வேறு ஷூட்-ஆஃப் சுற்றுகளில் ஈஷா சிங் போராடினார். இறுதியில் அவரை முந்தி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அதன் பின்னர் தங்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனையிடம் போராடி வெள்ளியுடன் நிறைவு செய்தார்.இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங் மீண்டும் பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோல், தமிழகத்தை சேர்ந்த வித்யா ராம்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மகளிர் 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் அவர், இலக்கை 54.75 நொடிகளில் அடைந்து மூன்றாமிடம் பிடித்தார். 400மீ மகளிர் தடை தாண்டும் ஓட்டத்தில் இது புதிய தேசிய சாதனையாகும்.முன்னதாக, 1984-ல் பிடி உஷா 55.42 நொடிகளில் ஓடி படைத்த சாதனையை வித்யா ராம்ராஜ் 2023ல் சமன் செய்திருந்தார். இது இந்தியாவுக்கு 40வது பதக்கமாகும்.

1newsnationuser5

Next Post

4 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையை ஜெயிலுக்கு அனுப்பிய மகள்..!! போதை மறுவாழ்வு மையத்தில் வெளிவந்த உண்மை..!! நடந்தது என்ன?

Mon Sep 28 , 2026
பதின்ம வயதில் பெற்ற தந்தையால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டாய கருக்கலைப்புக்கு ஆளான பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மௌனத்தை கலைத்து சட்டப் போராட்டம் மூலம் குற்றவாளியை சிறைக்கு அனுப்பியுள்ளார். 1980-களின் தொடக்கத்தில் தனக்கு 13 வயதாக இருந்தபோது தந்தை நிகழ்த்திய பாலியல் வன்கொடுமையை தாயிடம் கூறியும் குடும்பத்தினர் யாரும் அலிசனின் பேச்சை நம்பவில்லை. மாறாக, பள்ளி மைதானத்தில் மயங்கி விழுந்த அலிசனை மருத்துவரிடம் […]
Rape 2026 3

You May Like