பதின்ம வயதில் பெற்ற தந்தையால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டாய கருக்கலைப்புக்கு ஆளான பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு மௌனத்தை கலைத்து சட்டப் போராட்டம் மூலம் குற்றவாளியை சிறைக்கு அனுப்பியுள்ளார்.
1980-களின் தொடக்கத்தில் தனக்கு 13 வயதாக இருந்தபோது தந்தை நிகழ்த்திய பாலியல் வன்கொடுமையை தாயிடம் கூறியும் குடும்பத்தினர் யாரும் அலிசனின் பேச்சை நம்பவில்லை. மாறாக, பள்ளி மைதானத்தில் மயங்கி விழுந்த அலிசனை மருத்துவரிடம் அழைத்துச் சென்ற தந்தை, அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துள்ளார். இந்தத் துயரத்தை தாயிடம் வெளிப்படுத்தியபோது, அலிசனை வீட்டை விட்டே துரத்திய கொடூரமும் அரங்கேறியுள்ளது. ஆதரவற்று நின்ற அலிசனுக்கு அண்டை வீட்டு இளைஞர் புகலிடம் தந்து, பின்னர் 16 வயதில் அவரைத் திருமணமும் செய்துகொண்டார்.
எனினும், சிறுவயதில் ஏற்பட்ட ஆழமான மன வடுக்களால் அடுத்தடுத்து கடும் மன அழுத்தத்திற்கும் மதுப் பழக்கத்திற்கும் ஆளான அலிசன், கடந்த 2022-ஆம் ஆண்டு மறுவாழ்வு சிகிச்சைக்காக மருத்துவரை அணுகியபோதுதான் தனது கடந்த கால ரணங்களை முதன்முதலாக பகிர்ந்தார். மருத்துவரின் வழிகாட்டுதலில் காவல் துறைக்கு விவகாரம் சென்று தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதையடுத்து, அலிசனின் தந்தை கிளைவ் சிடால் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. பல ஆண்டுகால நரக வேதனைக்கு சட்டரீதியான நீதி இறுதியாக கிடைத்துள்ளதாக அலிசன் தெரிவித்துள்ளார்.
Read More : ஆசிய விளையாட்டு!. தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அபாரம்!. வித்யா ராம்ராஜ் வெண்கலம் வென்று அசத்தல்!.



