இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் (Flipkart), தனது பண்டிகைகாலச் சிறப்பு விற்பனையான ‘பிக் பில்லியன் டேஸ் சேல் 2026’ (Big Billion Days Sale) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் மின்னணுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குப் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன.
விற்பனை தொடங்கும் தேதி: பொதுப் பயனர்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் நிலையில், பிளஸ் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது அக்டோபர் 8-ஆம் தேதி முதலே சலுகைகள் கிடைக்கும்.
ஐஃபோன் 17 சலுகை விபரங்கள்: விற்பனையின் முக்கிய அம்சமாக, புதிதாக அறிமுகமான ஐஃபோன் 17 (iPhone 17) மாடலுக்கு பெருமளவில் விலை குறைக்கப்பட்டுள்ளது.
விலைக் குறைப்பு: ரூ.99,900 விற்பனை விலைக் கொண்ட ஐஃபோன் 17 (256GB மாடல்), இந்தச் சிறப்பு விற்பனையில் ரூ.79,999 என்ற சலுகை விலையில் கிடைக்கும். அதாவது நேரடியாக சுமார் ரூ.19,901 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வங்கிச் சலுகைகள்: கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,500 உடனடித் தள்ளுபடியும், தகுதியான பழைய போன்களை மாற்றும்போது ரூ.3,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது.
கூடுதல் கேஷ்பேக்: ப்ளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி அல்லது எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு 5% வரை கூடுதல் கேஷ்பேக் சலுகை கிடைப்பதால், இதன் இறுதி விலை ரூ.77,999 ஆகக் குறையும்.
வட்டி இல்லா தவணை (No-Cost EMI): 6 மாதங்கள் மற்றும் 9 மாதங்களுக்கான வட்டி இல்லா தவணை முறையும் கிடைக்கிறது. இதன் மூலம் மாதம் ரூ.8,667 முதல் செலுத்தி போனை வாங்கலாம்.
பழைய போன் எக்ஸ்சேஞ்ச்: உங்கள் பழைய போனின் நிலை மற்றும் மாடலைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.89,850 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது.
ஐஃபோன் 17 சிறப்பம்சங்கள்: 6.3 இன்ச் திரை (Display), சக்திவாய்ந்த ஏ19 (A19) சிப்செட், பிளாக், லாவெண்டர், மிஸ்ட் ப்ளூ, சேஜ், மற்றும் வைட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
ஐஃபோன் 15 மாடலுக்கும் பெரிய தள்ளுபடி: ஐஃபோன் 17 மட்டுமின்றி, ஐஃபோன் 15 (iPhone 15) மாடலும் குறைந்த விலையில் கிடைக்கவுள்ளது. வழக்கமாக ரூ.74,900 விலையில் விற்கப்படும் ஐஃபோன் 15, வங்கிச் சலுகைகளுடன் சேர்த்து ரூ.63,999 ஆரம்ப விலையில் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.54,400 வரை சேமிக்க முடியும். இந்த மாடல் 6.1 இன்ச் திரை மற்றும் ஏ16 பயோனிக் (A16 Bionic) சிப்செட் வசதியுடன் பிளாக், கிரீன், ப்ளூ, எல்லோ, பிங்க் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
இதுதவிர, மோட்டோரோலா எட்ஜ் சீரிஸ் (Motorola Edge series) மற்றும் கூகுள் பிக்சல் (Google Pixel) போன்ற பிற முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்புத் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



