தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த போலீஸ்..!! நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் விஜய்..!!

Police 2026

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. சுதாரித்துக் கொண்ட கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன், நொடிப் பொழுதில் காரின் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டார். கடத்தல் கும்பல், விளாங்குறிச்சியில் இருந்து அவிநாசி வரை சுமார் 40 கி.மீ தூரத்திற்கு அதிவேகமாக காரை இயக்கிச் சென்றது.


இதனிடையே தகவல் அறிந்து பின்தொடர்ந்த போலீஸ் படை, அவிநாசி அருகே அந்த காரை சுற்றி வளைத்து மடக்கியது. காரை சோதனையிட்டதில், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட சுமார் 233 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

சினிமா பாணியில் சொந்த உயிரையும் துச்சமென மதித்து குற்றவாளிகளை சிறைபிடித்த தலைமை காவலர் வேல்முருகனின் வீரதீர செயலைப் பாராட்டும் வகையில், அவரை சென்னை தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் வரவழைத்தார். அவரது துணிச்சலைப் பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்த முதல்வர், “கடமை முக்கியம்தான்; அதேசமயம் களப்பணியின்போது தங்களின் பாதுகாப்பிலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

Read More : என் குடும்பத்துக்கே செய்வினை வைக்குறியா? நள்ளிரவில் வீடு புகுந்து சித்தியை சிதைத்த இளைஞர்! கிருஷ்ணகிரியில் பயங்கரம்!

Next Post

பட்டப்பகலில் பயங்கரம்..! அண்ணன் - தம்பியை வெட்டி சாய்த்த கொடூரம்..! நடந்தது என்ன? நெல்லையில் அதிர்ச்சி..!

Tue Sep 29 , 2026
நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் டால்டன் (76). பெட்ரோல் பங்க் நடத்தி வந்த இவருக்கு நிக்கோலஸ் ராஜரத்தினம் (78) உள்பட 3 சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் நால்வருமே குவைத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்று, சொந்த ஊரான மணிப்புரத்தில் ஒரே வளாகத்தில் தனித்தனி வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்புக்கு அருகே மணிப்புரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவரது குடும்பக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் […]
Nellai 2026

You May Like