என் குடும்பத்துக்கே செய்வினை வைக்குறியா? நள்ளிரவில் வீடு புகுந்து சித்தியை சிதைத்த இளைஞர்! கிருஷ்ணகிரியில் பயங்கரம்!

Krishnagiri 2026

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தனது குடும்பத்திற்குச் செய்வினை வைத்ததாக கூறி, சித்தியை கொடூரமாக கழுத்தறுத்துக் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவப்பா என்பவரின் மனைவி சரசம்மா (50). இவர் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். சிவப்பாவின் அண்ணன் சோமப்பாவின் மகன் அசோக் (27), அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். சரசம்மா தனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து பில்லி, சூனியம் உள்ளிட்ட செய்வினை வைத்து வருவதாகக் கூறி, அசோக் அடிக்கடி அவரது குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த அசோக், ஆத்திரத்துடன் சரசம்மாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது வீட்டில் கணவன், மனைவி இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அவர்களை எழுப்பி அசோக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அசோக், மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் சரசம்மாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சரசம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், அங்கிருந்து தப்பி ஓடிய அசோக், நள்ளிரவு 12.30 மணியளவில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சென்றார். அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சென்று, “எனது சித்தியை கொன்றுவிட்டேன்” எனக் கூறி சரணடைந்தார். அவரை உடனடியாக கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தகவலறிந்த தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த சரசம்மாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read More : மாணவர்களுக்கு குட் நியூஸ்.. சைக்கிளுடன் ஹெல்மெட், தண்ணீர் பாட்டில்!

Next Post

13 வயது சிறுமிக்கு சிப்ஸ், ஆப்பிள் ஆசை காட்டி.. லாரி ஓட்டுநர் செய்த கொடூரம்!

Tue Sep 29 , 2026
13 வயது சிறுமியை தின்பண்டங்கள் வாங்கித் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்ற லாரி ஓட்டுநர், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் அருகில் இருந்த கடைக்காரர் ஒருவர் சம்பவத்தை கவனித்து உடனடியாக தலையிட்டதால் சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியிடம் நைசாக பேசி அவரை அழைத்துச் சென்ற அந்த நபர், பின்னர் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதை கவனித்த கடைக்காரர் உடனடியாக […]
e44917650049f6b1259cdaa46b1a02cd336acc08d95f3f496b234e1582b3d7e0

You May Like