செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.. வட்டியில் அதிரடி மாற்றம்..!! இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!! எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்..!!

Selva Magal 2025

பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகப் பெற்றோர்களால் அதிகம் தேர்ந்தெடுக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களில் முதன்மையானது ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ (SSY). தமிழகத்தில் இத்திட்டம் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ என்ற பெயரில் அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டிற்கு 8.2 சதவீத கூட்டு வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக்கான புதிய வட்டி விகிதங்களை மத்திய அரசு இன்று ( செப்.30) அறிவிக்கவுள்ளது.


ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது நிறைவடையும் வரை அவளது பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இக்கணக்கைத் தொடங்கலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கணக்கு முழுமையாக முதிர்ச்சியடையும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை இதில் டெபாசிட் செய்யலாம்.

ஆண்டுக்கு ரூ.50,000 முதலீடு: 15 ஆண்டுகளில் செலுத்தப்படும் மொத்தத் தொகை ரூ.7.5 லட்சம். முதலீடு நிறுத்தப்பட்ட பிறகும் மீதமுள்ள 6 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி கணக்கிடப்பட்டு, 21 ஆண்டுகளின் முடிவில் முதிர்வுத் தொகையாக ரூ.23.94 லட்சத்திற்கும் மேல் கைக்குக் கிடைக்கும்.

ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு: 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.15 லட்சமாக இருக்கும். 21 ஆண்டுகள் முடிவில் முதிர்வுத் தொகையாக ரூ.47 லட்சத்திற்கும் அதிகமாகத் திரும்பப் பெறலாம்.

ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு: ஆண்டுதோறும் அதிகபட்ச உச்சவரம்பான ரூ.1.5 லட்சத்தை 15 ஆண்டுகளுக்குச் செலுத்தினால் (மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம்), 21 ஆண்டுகள் கழித்து முதிர்வுத் தொகையாக ரூ.71.82 லட்சம் வரை கிடைக்கும்.

இத்திட்டம் முதலீடு, ஈட்டும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என மூன்றிற்குமே முழு வரிவிலக்கு அளிக்கும் ‘EEE’ அந்தஸ்தை கொண்டது. பழைய வரி முறையைக் கடைப்பிடிப்பவர்கள் வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்குப் பெற முடியும். பொதுவாக ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இக்கணக்கைத் தொடங்க முடியும். எனினும், இரட்டைக் குழந்தைகள் அல்லது அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறக்கும் சிறப்புச் சூழல்களில் உரிய ஆவணங்கள் மற்றும் உறுதிமொழிப் பத்திரத்தை சமர்ப்பித்து கூடுதல் கணக்குகளைத் தொடங்கலாம்.

ஆதார் விதிமுறைகள் :

செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கப் பாதுகாவலரின் ஆதார் ஆவணம் அவசியமாகும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் பதிவு எண்ணைச் சமர்ப்பிக்கலாம்; எனினும் கணக்கு தொடங்கிய 6 மாதங்களுக்குள் அசல் ஆதார் விவரங்களை இணைக்க வேண்டும், தவறினால் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது.

Read More : முதல்வரின் கோரிக்கையை நிராகரிக்கணும்..!! இடைத்தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையம் அதிரடி..!! ஐகோர்ட்டில் காரசார வாதம்..!!

Next Post

வரும் மாதங்களில் பெரும் உணவு பஞ்சம் ஏற்படும்!. ஜெய்சங்கர் விடுத்த பகீர் எச்சரிக்கை!. தத்தளிக்கும் உலக நாடுகள்!.

Wed Sep 30 , 2026
உக்ரைன் மற்றும் ஈரான்-வளைகுடா பகுதிகளில் நிலவி வரும் மோதல்களால், தானியங்கள் மற்றும் உரங்களின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மாதங்களில் உலகம் முழுவதும் ‘பெரும் உணவு நெருக்கடி’ ஏற்பட வாய்ப்புள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார். திங்களன்று நியூயார்க்கில் உள்ள ‘ஆசியா சொசைட்டி’ (Asia Society) அமைப்பு நடத்திய உரையாடல் நிகழ்வில் பேசிய அவர், உக்ரைன் மற்றும் தற்போதைய ஈரான்-வளைகுடா மோதல்கள், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் […]
food crisis jaishankar 30kb

You May Like