ஜியோவின் 10-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜியோபாரத் 4ஜி போன்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது 2ஜி போன் பயன்படுத்தி வருபவர்களை 4ஜி சேவைக்கு மாற்றும் நோக்கில் இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது.
இந்தச் சலுகையின் கீழ் தகுதியுள்ள ஜியோபாரத் 4ஜி போனை ரூ.1,499-க்கு வாங்கலாம். இதனுடன் 6 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 14GB டேட்டா மற்றும் வரம்பற்ற HD குரல் அழைப்புகள் இந்தத் திட்டத்தில் கிடைக்கும்.
வழக்கமாக மாதம் ரூ.199 என்ற கணக்கில் ரீசார்ஜ் செய்தால், 6 மாதங்களுக்கு சுமார் ரூ.1,194 செலவாகும். அந்தத் தொகையை கணக்கில் எடுத்துக்கொண்டால், போனுக்கான செலவு ரூ.1,499 என்றாலும், சலுகையின் மூலம் ரீசார்ஜ் பலன் கிடைப்பதால் பயனர்களுக்கான மொத்த செலவு குறைவதாக ஜியோ தெரிவித்துள்ளது.
எந்த போன்களுக்கு சலுகை?
ஜியோபாரத் B1 மற்றும் ஜியோபாரத் B2 ஆகிய மாடல்களுக்கு இந்தச் சலுகை பொருந்துகிறது. 2.3 இன்ச் டிஸ்பிளே, கீபேட், 4ஜி இணைப்பு மற்றும் 2,000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இந்த போன்களில் இடம்பெற்றுள்ளன.
வழக்கமான அழைப்பு மற்றும் இணையப் பயன்பாட்டுடன், பல்வேறு டிஜிட்டல் சேவைகளையும் இந்த போன்களில் பயன்படுத்த முடியும். JioPay மூலம் UPI பணப் பரிவர்த்தனை, JioTV மூலம் நேரலை தொலைக்காட்சி சேனல்கள், JioSaavn மூலம் இசை மற்றும் JioHotstar மூலம் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை அணுகும் வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், சில பாதுகாப்பு மற்றும் இருப்பிட வசதிகளும் போனில் இடம்பெற்றுள்ளன. இதனால் அடிப்படை மொபைல் பயன்பாட்டுடன் டிஜிட்டல் சேவைகளையும் ஒரே சாதனத்தில் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
எங்கு வாங்கலாம்?
ஜியோபாரத் 4ஜி போன்களை JioMart, Reliance Digital மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வாங்க முடியும். முன்னணி இ-காமர்ஸ் தளங்களிலும் இந்த போன்கள் கிடைக்கின்றன.
இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதால், போன் வாங்குவதற்கு முன்பு 6 மாத இலவச ரீசார்ஜ் உள்ளிட்ட சலுகையின் முழு விதிமுறைகள் மற்றும் தகுதி நிபந்தனைகளைச் சரிபார்ப்பது அவசியம்.
Also Read: “விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்கணும்!”.. டெல்லி சாலையில் படுத்து ரசிகை செய்த காரியம்!



