இனி டோல்கேட்டில் வாகனங்கள் நிற்க தேவையில்லை! இன்று முதல் அமல்..!! எப்படி கட்டணம் வசூலிக்கப்படும் தெரியுமா?

toll plaza 2 1 1

சென்னைக்கு செல்லும் தென் மாவட்ட வாகனங்களின் பிரதான நுழைவு வாயிலாக திகழும் பரனூர் சுங்கச்சாவடியில், அதிநவீன தானியங்கி தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை (Multi-Lane Free Flow – MLFF) இன்று (அக்டோபர் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், டோல்கேட்டில் ஸ்கேன் செய்வதற்காக வாகனங்களை நிறுத்தும் அவசியமின்றி, இயல்பான வேகத்தில் பயணிக்கும்போதே சுங்கக் கட்டணம் தானாக பிடித்தம் செய்யப்படும் நவீன வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் வார இறுதி நாட்கள், விடுமுறை மற்றும் பண்டிகைக் காலங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். பாஸ்டேக் ஸ்கேன் செய்வதற்காக ஒவ்வொரு வாகனமும் சில நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததால், பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். தற்போது அதிநவீன ஏஐ (AI) தொழில்நுட்பம் மற்றும் கேமராக்களின் வருகையால், இந்த நீண்ட நேரக் காத்திருப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

முற்றிலும் ஆளில்லா மற்றும் தடையற்ற முறையில் இயங்கும் இந்த எம்.எல்.எஃப்.எஃப் (MLFF) வசதிக்காக, சுங்கச்சாவடிக்கு சற்று முன்பாகவே சாலையின் குறுக்கே உயரமான கேன்ட்ரிகள் (Gantries) அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிநவீன நம்பர் பிளேட் கண்காணிப்பு கேமராக்கள் (ANPR), ஆர்.எஃப்.ஐ.டி (RFID) ரீடர்கள் மற்றும் ரேடார் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் அந்தப் பகுதியைக் கடக்கும் நொடியிலேயே, கேமராக்கள் வாகனத்தின் பதிவு எண் மற்றும் பாஸ்டேக் கணக்கைத் துல்லியமாக கண்டறிந்து கட்டணத்தை தானாக கழித்துவிடும்.

ஒருவேளை பாஸ்டேக் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யாவிட்டாலும், கேமராக்களில் பதிவாகும் நம்பர் பிளேட் புகைப்படத்தின் அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படும். அதேசமயம், பாஸ்டேக்கில் போதுமான இருப்புத் தொகை இல்லாமலோ அல்லது விதிமுறைகளை மீறியோ சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களுக்கு, நேரடியாக அவர்களின் முகவரிக்கே கூடுதல் அபராதச் சலான் (Challan) அனுப்பி வைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் தொடங்கும் நிலையில் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய முறையால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கு..!! ஜெம் வீரமணி மீது பாய்ந்தது குண்டாஸ்..!! சென்னை கமிஷனர் உத்தரவு..!!

Next Post

நோயாளியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ்.. வழியில் நடந்த கோர விபத்து; செவிலியர் பலி!

Thu Oct 1 , 2026
டிராக்டர் டிராலிக்குள் ஆம்புலன்ஸின் முன்பகுதி சிக்கிக்கொண்ட நிலையில், உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் பரபரப்பு ஏற்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி அருகே இன்று காலை நடந்த இந்த விபத்தில் பெண் செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சம்பல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ், முன்னால் சென்றுகொண்டிருந்த டிராக்டர் டிராலியின் மீது திடீரென மோதியது. மோதல் மிகவும் வலுவாக இருந்ததால் ஆம்புலன்ஸின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி […]
6a6432649822b6971d693342d9dcb1fe4d53c15dd4c45d3023a8d44e9bee5d79

You May Like