மருத்துவ காப்பீடு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சம் ஆக உயர்வு!. முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

Medicalinsurance

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில். முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை ஆண்டொன்றுக்கு தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். தஞ்சை, கோவை, நெல்லை , மதுரை மற்றும் விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிசிக்சை மையங்கள் அமைக்கப்படும்.

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை தலைமை மையம் அமைக்கப்படும். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.84 கோடியில் 8 தளங்களுடன் மண்டல புற்று நோய் மையம் அமைக்கப்படும். பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.106.17 கோடி ஒதுக்கப்படும்.

தரமான மருத்துவச் சேவையை உறுதி செய்யும் வகையில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் 6,098 கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதில் 660 பி.எஸ்.சி. செவிலியர் இடங்கள், 1,925 செவிலியர் கல்லூரி இடங்கள், 2,778 துணை மருத்துவப் படிப்பு இடங்கள் மற்றும் 735 மருத்துவியல் இடங்கள் அடங்கும்.

தமிழகத்தில் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும். திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவச் சேவைகள் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்றுநோய்களைத் தடுத்து ஆரம்ப நிலையிலேயே தரமான சிகிச்சை வழங்குவதற்காக “முதல்-அமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு ” (Chief Minister’s Cancer Care Mission) ரூ.673 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

இருப்பினும், ஒரே அடியாக மருத்துவ காப்பீடு 5 மடங்கு உயர்த்தியது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதற்கு பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களும் நன்றி தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அரசாணை வெளியானதும் நடைமுறைக்கு வரும்.

1newsnationuser5

Next Post

பெரும் துயரம்!. கொல்கத்தா ஓட்டலில் பயங்கர தீ விபத்து!. வங்கதேசத்தினர் 9 பேர் பலியான சோகம்!

Wed Aug 19 , 2026
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள நான்கு மாடி ஹோட்டல் ஒன்றில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணியளவில் திடீரென தீப்பற்றியது. இதில் மருத்துவச் சிகிச்சைக்காக கொல்கத்தா வந்திருந்த வங்கதேசத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட […]
kolkata fire 9 dead

You May Like