அரியலூர் மாவட்டம் செந்துறை வள்ளலார் நகரில் மெயின் ரோட்டில், சுப்பிரமணியன் என்பவர் வீடு கட்டி வருகிறார். கட்டிடத்தின் பின்புறம் செப்டிக் டேங்க் கட்டப்பட்டு, உள்புறத்தில் வேலை நடந்து வந்தது. இங்கு வேலை செய்து வந்த தினகரன் என்பவர் செப்டிக் டேங்கிற்குள் இறங்கி மரப்பலகைகளை அகற்ற முயன்றார். அப்போது, விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி மயங்கி விழுந்தார்.
அவரை காப்பாற்றுவதற்காக பாஸ்கர், ராமச்சந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து செப்டிக் டேங்கிற்குள் இறங்கினர். அவர்களும், விஷவாயு தாக்கி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மூன்று பேரும் செப்டிக் டேங்கிற்குள் மயங்கி கிடந்ததை வீட்டு உரிமையாளர் சுப்பிரமணியன் பார்த்து போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தார். பின்னர், 3 பேரும் மீட்கப்பட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Read More : குட் நியூஸ்..!! அனைத்துப் பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!


