அக்.9 வரை இடி, மின்னலுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்?

Heavy Rain 2026

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரபிக்கடல் வரை நீளும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அதீத கனமழை வெளுத்து வாங்கும் என எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா முதல் மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை வடதமிழகம் மற்றும் கேரளப் பகுதிகள் வழியாகக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை இன்று(அக். 5) மற்றும் நாளை (அக். 6) கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல், இன்று டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பதிவாகக்கூடும். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Read More : தாய்மாமன் தங்க மோதிரம் எங்கே? செவிலியரை மண்வெட்டியால் கொடூரமாக தாக்கிய வாலிபர்..!! கும்பகோணத்தில் அதிர்ச்சி..!!

Next Post

ஆசிய விளையாட்டு நிறைவு!. இலங்கை முதல் பாகிஸ்தான் வரை... கிரிக்கெட், கபடி, ஹாக்கியில் ஆல்-ரவுண்ட் ஆதிக்கம் செலுத்திய இந்தியா!. சாதனை பயணம்!.

Mon Oct 5 , 2026
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பதக்கப் பட்டியலில் இந்தியா ஒட்டுமொத்தமாக 4-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்போட்டித் தொடரில் இந்திய வீராங்கனைகளும் வீரர்களும் மொத்தம் 85 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். போட்டியின் தொடக்கத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்குச் சோபிக்கத் தவறி வெளியேறியது. இருப்பினும், வில்வித்தை, மல்யுத்தம் மற்றும் தடகளப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகளும் வீரர்களும் மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை […]
Asian Games india Medal Tally 30kb

You May Like