தலைநகரில் பரப்பரப்பு; மீண்டும் போர்க்களமான ஜந்தர் மந்தர்!. 5000 போலீசார் குவிப்பு!. பல அடுக்கு பாதுகாப்பில் டெல்லி!.

Jantar Mantar protests 30kb

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்துத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் 3-வது நாளான நேற்று, இந்தியா கேட் பகுதியிலிருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.


அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், பெருந்திரளான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லி காவல்துறை கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், விரைவு அதிரடிப் படை (RAF) மற்றும் மத்திய துணை ராணுவப் படையினருடன் சேர்த்து சுமார் 5,000 போலீசார் டெல்லி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜந்தர் மந்தர் பகுதிக்குச் செல்லும் டால்ஸ்டாய் மார்க், ஜன்பத் சாலை, சன்சத் மார்க், கேரளா பவன், அசோகா சாலை மற்றும் சி-ஹெக்சகன் ஆகிய வழிகளில் பல அடுக்கு இரும்புப் தடுப்புகள் அமைக்கப்பட்டு முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

மக்கள் கூட்டத்தின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அனைத்து சிசிடிவி காட்சிப் பதிவுகளும் டெல்லி புதுடெல்லி துணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றன.

பாராளுமன்ற வீதி காவல் நிலையத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை இருபுறமும் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்குக் கலவரத் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் தொடர்பாகப் போலீஸார் 3 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளனர். மேலும், பெண் போராட்டக்காரர்கள் மற்றும் பெண்ளிடம் போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தக் குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

உஷார்... எவரெஸ்ட் சீரகத் தூளில் ஆபத்தான பூச்சிக்கொல்லி!. தடை விதித்து FSSAI அதிரடி உத்தரவு!

Mon Oct 5 , 2026
பிரபல மசாலா நிறுவனமான ‘எவரெஸ்ட் ஃபூட் ப்ராடக்ட்ஸ்’ (Everest Food Products) தயாரிப்பான பாக்கெட் சீரகத் தூளில் (Pre-packed Cumin Powder) அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பூச்சிக்கொல்லி மருந்தின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட சீரகத் தூள் பாக்கெட்டுகளைச் சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று, சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக […]
everest cumin powder 30kb

You May Like