ஐபிஎல் 2027!. மீண்டும் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம்!.

Sourav Ganguly 1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி, ஐபிஎல் தொடரின் 2027 சீசனுக்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.


2026-ஆம் ஆண்டு சீசனுடன் ஹேமங் பதானியின் பயிற்சியாளர் காலம் நிறைவடைந்ததை அடுத்து, கங்குலி இந்த முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, எஸ்ஏ20 (SA20) லீக் தொடரில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக சிறப்பான பங்களிப்பை வழங்கிய அவர், தற்போது டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 2027 மற்றும் 2028 ஐபிஎல் சுழற்சிக்காக ‘ஜேஎப்எஸ் ஸ்போர்ட்ஸ்’ (JSW Sports) நிர்வாகம் டெல்லி அணியின் முழுமையான செயல்பாட்டுப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

தமது புதிய பொறுப்பு குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், “ஐபிஎல் தொடரில் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டெல்லி கேப்பிடல்ஸ் அணி என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு ஃபிரான்சைஸ் ஆகும். அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் வீரர்களுடன் எனக்கு ஏற்கனவே நல்ல உறவு உள்ளது. நாம் ஒரு திறமையான அணியைக் கொண்டுள்ளோம். வரவிருக்கும் புதிய சீசனுக்காகவும், ஒரு வலிமையான மற்றும் பயமற்ற அணியை (fearless team) உருவாக்குவதற்கும் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறுகையில், “‘தாதா’ (சவுரவ் கங்குலி) எப்போதும் டெல்லி கேப்பிடல்ஸ் குடும்பத்தின் ஒரு முக்கியமான அங்கமாகவே இருந்து வருகிறார். இந்திய கிரிக்கிட்டின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான அவர், தற்போது தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவரது வழிகாட்டுதலின் கீழ் டெல்லி அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முழுமையாகத் தயாராகும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லி அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறியதைத் தொடர்ந்து, அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

விசில் சின்னத்துக்கு நேராக கருப்பு மை.. மதுராந்தகம் இடைத்தேர்தலில் திடீர் பரபரப்பு!

Tue Oct 6 , 2026
வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான பிரச்சினைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் விசில் சின்னத்துக்கு நேரான பட்டனில் கருப்பு மை இருந்ததாக எழுந்த புகாரால் அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வழக்கமான நடைமுறையாக காலை 6 மணிக்கு […]
40f97031e6f5f8e8d64bb8a3b22e38dc1ac1db09c6e598af3b03b0205d383ac9

You May Like