திருவண்ணாமலைக்கு இணையான மற்றொரு சித்தர் பூமி! சோழ மன்னனுக்கு வெற்றியைத் தந்த சுயம்பு லிங்கம்! தருமபுரியில் இப்படியொரு கோயிலா?

Thiruvannamalai 2026

சித்தர்கள் தவமியற்றும் பூமி, மலையை வலம் வந்து சிவனை வழிபடும் தலம் என்றதுமே பக்தர்கள் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்தான். ஆனால், அதே ஆன்மீகப் பெருமைகளுடன் சித்தர்கள் இன்றும் சூட்சும வடிவில் வாழ்ந்து ஈசனை வழிபடுவதாகவும், பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் கிரிவலம் வருவதாகவும் போற்றப்படும் மற்றொரு புண்ணியத் தலம் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணேஸ்வரர் மலைக்கோவில் ஆகும். எவர் ஒருவருக்கு ஈசனின் அருள் பரிபூரணமாக கிடைக்கிறதோ, அவர்களால் மட்டுமே இத்தலத்தின் பெருமைகளை அறிந்து கொள்ளவோ, இங்கு வந்து தரிசிக்கவோ முடியும் என்பது காலங்காலமாக நிலவும் தீவிர நம்பிக்கையாகும்.


இக்கோவில் உருவானதற்கு பின்னால் சுவாரசியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் போருக்குப் புறப்பட்டபோது, காரிமங்கலம் மலைப்பகுதியில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது போரில் தான் வெற்றியடைந்தால் அவ்விடத்தில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புவதாக மனமுருக வேண்டினார். அன்று இரவே மன்னனின் கனவில் லிங்க வடிவில் தோன்றிய சிவபெருமான், போரில் வெற்றி உறுதி என ஆசியளித்தார். மறுநாள் காலையில் காட்டில் பசு ஒன்று குறிப்பிட்ட மரத்தடியில் தானாகப் பால் சொரிவதைக் கண்ட மன்னன், அங்கு சென்று பார்த்தபோது சுயம்பு லிங்கம் இருப்பதைக் கண்டு வியந்தார். அந்த லிங்கத்தை வழிபட்ட பின்னரே போருக்குச் சென்ற மன்னன், வரலாற்று வெற்றியை ஈட்டினார்.

வெற்றிக்குப் பிறகு தலைநகர் திரும்பிய சோழ மன்னன், சாஸ்திர வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு காரிமங்கலம் மலையின் உச்சியில் கம்பீரமான கற்றளி அமைத்து அருணேஸ்வரர் ஆலயத்தை எழுப்பினார். தருமபுரி மாவட்டத்திலேயே ராஜகோபுரத்தைக் கொண்ட ஒரே மலைக்கோவில் என்ற தனிப்பெருமை இத்தலத்திற்கு மட்டுமே உண்டு. மூலவரின் கருவறைக்குப் பின்னால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் இன்றும் காட்சியளிக்கின்றன. ராகு-கேது மற்றும் பல்லி தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் அன்னை அபிதகுஜலாம்பாள் அருள்பாலிக்கிறார். காரியத் தடைகள் நீங்கவும், மன அமைதி பெறவும், சித்தர்களின் தரிசனம் பெற்று ஆன்மீக பலம் பெறவும் பௌர்ணமி மற்றும் சிவராத்திரி நாட்களில் பக்தர்கள் இங்கு வந்து மலையை வலம் வந்து தியானத்தில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.

Read More : ரூ.600 கோடி சொத்தை காட்டியவருக்கு ரூ.30 லட்சம்தான் பிரச்சனையா? ஆடிட்டர் செஞ்ச தப்புக்கு முதல்வர் என்ன பண்ணுவாரு? ஐகோர்ட் சரமாரி கேள்வி!

Next Post

தென்காசியில் இப்படியொரு கோயிலா? திருமண தடைகள் நீங்கும்! ஒருமுறையாவது போயிட்டு வாங்க.. வாழ்க்கையே மாறும்!

Thu Oct 8 , 2026
சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தை நாம் தரிசித்திருப்போம்; ஆனால் சைவமும் வைணவமும் ஒன்றே என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், ஒரே திருமேனியில் வலப்பக்கம் சிவபெருமானாகவும், இடப்பக்கம் மகாவிஷ்ணுவாகவும் காட்சி தரும் ஒப்பற்ற திருத்தலம்தான் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி – கோமதி அம்மன் – சங்கர நாராயணர் திருக்கோயில். சிவபெருமானை மட்டுமே முழுமுதற்கடவுளாக வழிபட்ட சங்கன், மகாவிஷ்ணுவையே பரம்பொருளாகப் போற்றிய பதுமன் ஆகிய […]
Thenkasi Temple 2026

You May Like