சினிமா உலகை கலக்கிய நடிகர் நானா படேகர் மறைவு!. பிரதமர் மோடி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இரங்கல்!

Nana Patekar death 30kb

மூத்த நடிகரும் இயக்குநருமான நானா படேகர் (75) மாரடைப்பு காரணமாக கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.


கோவா டோனா பாலா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் மயங்கி விழுந்த அவர், உடனடியாக மணிப்பால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சேகர் சல்கர் கூறுகையில், காலை 5:20 மணியளவில் அவர் காலமானதாகவும், தொடர்ந்து 45 நிமிடங்கள் முயன்றும் அவரை மீட்டெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் புனே கொண்டு செல்லப்படவுள்ளதாக அவரது மகன் மல்கார் படேகர் உறுதிப்படுத்தியுள்ளார.

பிரதமர் மோடி இரங்கல்:

நானா படேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நானா படேகரைப் போன்ற தீவிரத்தன்மையும், தனித்துவமும் கொண்ட நடிகர்கள் மிகக் குறைவு. அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன் தனித்துவமான திறமையையும் பல்துறை ஆற்றலையும் வழங்கினார்; தலைமுறைகள் கடந்தும் நினைவில் கொள்ளத்தக்க பல கதாபாத்திரங்களை நமக்கு அளித்தார். தனது நேர்மையான மற்றும் வெளிப்படையான கருத்துகளுக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். இந்தி மற்றும் மராட்டிய சினிமாவுக்கு நானா படேகர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது மறைவு திரைத்துறையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மூத்த நடிகர் நானா படேகரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர் ஆகும். இவர் மகாராஷ்டிராவில் உள்ள முருட்-ஜன்ஜிரா பகுதியில் கடந்த 1951ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்தார். இவரது ஆரம்ப வாழ்க்கை கடுமையான வறுமை நிறைந்ததாக இருந்ததால், சிறு வயதிலேயே வேலைக்குச் செல்லத் தொடங்கினார். குறிப்பாக, மும்பையின் சுனாபட்டி பகுதியில் சினிமா போஸ்டர் ஒட்டும் பணியை மேற்கொண்டு, ஆரம்ப காலத்தில் மாதத்திற்கு சுமார் 35 ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.

கடின உழைப்பிற்குப் பிறகு சினிமா உலகிற்குள் நுழைந்த இவர், 1978ஆம் ஆண்டில் வெளியான ‘கமன்’ என்ற படத்தின் மூலம் நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர், 1989ஆம் ஆண்டில் வெளியான ‘பரிந்தா’ திரைப்படம் இவரது திரைவாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததுடன், அப்படத்திற்காக தேசிய விருதும் பிலிம்பேர் விருதும் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து அங்கார், தி ரெங்கா, கிராந்திவீர், அக்னிசாக்ஷி, கமோஷி: தி மியூசிக்கல், சக்தி, அபஹரன், ராஜநீதி போன்ற பல புகழ்பெற்ற வெற்றிப் படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

1newsnationuser5

Next Post

'அதற்கான நேரம் வந்துவிட்டது...' அமைதிக்கான நோபல் பரிசுக்கு மீண்டும் அடிபோடும் டிரம்ப்!

Thu Oct 8 , 2026
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகக் கூறி, அமைதிக்கான நோபல் பரிசு கோரிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். எனினும், அந்தப் புகழ்பெற்ற விருது தனக்கு கிடைக்குமா என்பதில் அவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. புதன்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், 2026ஆம் ஆண்டுக்கான விருது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் […]
trump 4

You May Like