சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை தமிழக எல்லைக்கு ஆந்திர அரசு திறந்துவிட வேண்டும். ஆனால் நடப்பாண்டில் இதுவரை தமிழகத்திற்கு வெறும் 2.251 டிஎம்சி அடி நீர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளது.
இதனிடையே ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் பாயும் ஆறுகளின் குறுக்கே புதிய அணைகளை கட்ட அம்மாநில அரசு முனைப்பு காட்டி வருவது தமிழக விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய நீர் வரத்து மேலும் குறையும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், நிலுவையில் உள்ள நதிநீர் பங்கீடு குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவும், நதிநீர் இணைப்பு திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் விஜய் வரும் 13-ம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து பேச உள்ளார்.
முன்னதாக, காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் விஜய் பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால், அப்போது கர்நாடக முதல்வராக இருந்த டிகே சிவக்குமார் விடுத்த வேண்டுகோளை ஏற்று விஜய்யின் கர்நாடக பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : 45 மெட்ரோ நிலையங்கள் மூடல்! இன்டர்நெட் சேவை கட்! டெல்லியில் இறங்கிய ராணுவ படை! என்ன நடக்கிறது?



