தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் மாணவர் அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் டெல்லி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜந்தர் மந்தரில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் போராட்டக்காரர்கள் திரண்டு திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் டெல்லி மாநகரம் முழுவதும் காவல்துறையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ராஜீவ் சவுக், நியூ டெல்லி, சென்ட்ரல் செக்ரடேரியட் உள்ளிட்ட 45 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லியின் ஜன்பத் – கர்த்தவ்யா பத் சந்திப்பு பகுதிகளை சுற்றிலும் 24 மணி நேரத்திற்கு தற்காலிகமாக மொபைல் இணைய சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை முன்னெடுத்த அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, ரத்னா சிங் உள்ளிட்ட முக்கிய சிஜேபி அமைப்பின் தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுடன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Read More : நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை! எஜமானர்களை திருப்திப்படுத்த துடிக்கும் தவெக அரசு! விளாசிய ஸ்டாலின்!



