நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், தனது மனைவியின் உடன் பிறந்த சகோதரிகளின் முகங்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் நிர்வாண பெண்களின் உடல்களுடன் இணைத்து ஆபாசமாக மாற்றிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கூடலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் (35) என்பவர், நெல்லூர் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் நிலையில், தனது மனைவி மேனகாவுடன் (30) குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனியார் கல்லூரியில் படிக்கும் மேனகா, கல்லூரி பணிக்காக தனது லேப்டாப்பை திறந்து பார்த்தபோது, தனது 25 வயது அக்காள் மற்றும் 20 வயது தங்கையின் படங்கள் ஏஐ மூலம் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு இருந்ததை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் காரணமாக ஏஐ செயலிகளை பயன்படுத்தி படங்களை மாற்றியமைத்ததாக இளங்கோவன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த படங்கள் வேறு யாருக்கேனும் பகிரப்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் தனது குடும்பத்தினரிடம் விஷயத்தை பகிர்ந்த மேனகா, பின்னர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 79 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், இளங்கோவனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More : அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஆந்திரா விரைகிறார் முதல்வர் விஜய்! சந்திரபாபு நாயுடுவுடன் முக்கிய ஆலோசனை!



