எலும்பு முறிவு சிகிச்சைக்கு போன கல்லூரி மாணவி மர்ம மரணம்! தனியார் மருத்துவமனையில் பதற்றம்! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

hospitalised

தனியார் மருத்துவமனையில் கை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 19 வயது மாணவி சுபஸ்ரீ, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 21-ம் தேதி அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து, முதலில் கட்டு போட்டுக் கொண்ட போதிலும் வலி குறையாததால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனைக்கு பிறகு, அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணமாகும் என மருத்துவர்கள் கூறியதையடுத்து அவருக்கு கையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் அதே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த சுபஸ்ரீக்கு, நேற்று இரவு திடீரென நுரையீரல் பாதிப்பு மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை மிக மோசமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இன்று அதிகாலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் குடும்பத்தாரிடம் தெரிவித்தது. இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாதாரண எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற வந்த மாணவிக்கு மருத்துவ நெறிமுறைகளின்படி உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியின் மரணத்துக்கான உண்மை காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : கணவரின் லேப்டாப்பில் மச்சினிச்சிகளின் அந்தரங்க படங்கள்! பார்த்து ஷாக்கான மனைவி! குடும்பமே சேர்ந்து செய்த சம்பவம்!

Next Post

தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் விஜய், இபிஎஸ்! கூட்டணியில் மாற்றமா? அரசியலில் பெரும் பரபரப்பு!

Sat Oct 10 , 2026
சென்னையில் நடைபெறும் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்.11) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை தருகிறார். காலை 11.15 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தடையும் பிரதமரை, விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேச உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை […]
Modi Vijay Eps 2026

You May Like