சென்னையில் கோலாகலமாக தொடங்கிய மெட்ரோ 2-ம் கட்ட சேவை!. பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் தொடங்கி வைத்தனர்!.

pm modi cm vijay 30kb

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட வழித்தடமான பூந்தமல்லி – வடபழனி இடையேயான சேவையை பிரதமர் மோடியும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் இணைந்து இன்று (அக்டோபர் 11, 2026) கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.


பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் வரவேற்றார். மேலும் அவருக்கு வழி நெடுகிலும் பாஜகவின் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மெட்ரோ சேவை தொடக்கம் உள்ளிட்ட அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்கிறார்.

அதன் ஒரு பகுதியாக பல மாத எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து நண்பகலில் புறப்பட்ட முதல் மெட்ரோ ரயிலில் பிரதமரும் முதலமைச்சரும் முதல் பயணிகளாகப் பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து ரயில் நிலைய பயணிகள், வழித்தட விரிவாக்கம் ஆகியவற்றை மோடி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். போரூர் – வடபழனி இடையிலான இந்த சேவை தற்போது முதல் தொடங்குகிறது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வணிக மற்றும் கனரக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்பதில் முதலமைச்சர் விஜய்யும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்று சேர்ந்தனர். இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1newsnationuser5

Next Post

அம்பாள் அருள் பெருகட்டும்!. 'கற்பூர நாயகியே' என்ற தமிழ் பாடலை பகிர்ந்து பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து!.

Sun Oct 11 , 2026
நவராத்திரி திருவிழாவின் முதல் நாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும், நல்வாழ்வும் பெருகப் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “தெய்வீக சக்தியை வழிபடும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அன்னை ஜெகதம்பாவின் அருளால் அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், அமைதியும், […]
PM Modi Navratri greetings 30kb

You May Like