தாயுடன் நகை வாங்கச் சென்ற 2 வயது பெண் குழந்தை, ஹைதராபாத்தில் உள்ள நகைக்கடையில் சயனைடு (Cyanide) விழுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் தரத்தைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் சயனைடு குழந்தையின் உயிரைப் பறித்த இந்தத் துயரச் சம்பவம், நகைக்கடைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, தாய் ஒருவர் தனது 2 வயது மகளுடன் நகை வாங்குவதற்காக ஹைதராபாத்தில் உள்ள நகைக்கடைக்குச் சென்றுள்ளார். கடை ஊழியர்கள் பல்வேறு நகைகளை எடுத்துக் காட்டியபோது, தாய் அவற்றைப் பார்ப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். அப்போது அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, மேசையில் வைக்கப்பட்டிருந்த சயனைடை எடுத்து வாயில் போட்டுள்ளது.
சிறிது நேரத்திலேயே குழந்தை மயங்கி விழுந்ததால் தாய் அதிர்ச்சியடைந்தார். கடை ஊழியர்களின் உதவியுடன் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
தங்கத்தின் தூய்மையைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் சயனைடு மிகவும் ஆபத்தானது. இத்தகைய ரசாயனங்களை குழந்தைகள் எளிதில் எட்டக்கூடிய இடங்களில் வைப்பது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும். இந்தச் சம்பவம், நகைக்கடைகளில் சயனைடைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Also Read: 60 சவரன் நகைக் கொள்ளை.. போலீசாரிடம் சிக்கியதும் கழுத்தை அறுத்துக்கொண்ட கொள்ளையன்!



