நைட்டியில் வந்த ஆம்புலன்ஸ் கொள்ளையர்கள்!. ஏடிஎம் இயந்திரத்தை அறுத்து விசித்திர கொள்ளை!. பகீர் சிசிடிவி காட்சிகள்!

nightgowns ATM theft 30kb

தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் முகமூடி மற்றும் பெண்களின் நைட்டி அணிந்த மர்ம நபர்கள், ஆம்புலன்ஸில் வந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காந்தாரி மண்டல தலைமையகப் பகுதியில் உள்ள காமாரெட்டி-பான்ஸ்வாடா பிரதான சாலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 1:30 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சேதமடைந்த ஏடிஎம் எந்திரத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏடிஎம் மையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களில் இந்த விசித்திர கொள்ளைச் சம்பவம் முழுமையாகப் பதிவாகியுள்ளது. கேஸ் கட்டர் உள்ளிட்ட கனரகக் கருவிகளைப் பயன்படுத்தி எந்திரத்தை அறுத்தெடுத்த கொள்ளையர்கள், பணப் பைகளுடன் தப்பிச் சென்றது காட்சிகளில் தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கொள்ளையடிக்கப்பட்ட தொகையின் துல்லியமான விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வங்கிப் பதிவேடுகள், சமீபத்திய டெபாசிட்கள் மற்றும் மீதமுள்ள இருப்புத் தொகையைக் கணக்கிட்டு நிதி இழப்பைத் தீர்மானிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து காந்தாரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 19 அன்று கரீம்நகர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள இரண்டு எஸ்பிஐ ஏடிஎம்களிலும் இதேபோல நைட்டி அணிந்த கொள்ளையர்கள் கேஸ் கட்டர் பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்தில் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி மூலம் 500-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக ஏமாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த இருவரைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

நவராத்திரி ஸ்பெஷல்!. உயர் ரக பைக்குகளை கொண்டு பிரம்மாண்ட துர்க்கை அம்மன் உருவம்!. வைரல் வீடியோ!

Mon Oct 12 , 2026
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, குஜராத்தின் சூரத் நகரத்தைச் சேர்ந்த பைக் பிரியர்கள் துர்க்கை அம்மனுக்குத் தங்களது பக்தியைச் செலுத்தும் வகையில் ஒரு புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தபாரி கடற்கரையில் (Dabhari Beach) 71 உயர்வகை பைக்குகளைக் கொண்டு, துர்க்கை அம்மனின் பிரம்மாண்ட உருவப் படத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர். பாரம்பரியப் பொருட்களைப் பயன்படுத்தாமல், தங்களின் அன்றாட விருப்பமான பைக்குகளைக் கொண்டே இந்த பிரம்மாண்ட வடிவத்தைக் கொண்டு வந்துள்ளனர். திறந்தவெளி மணற்பரப்பில் 71 […]
Durga bikers navratri 30kb

You May Like