“நீ செத்துத் தொல.. எனக்கு இன்ஸ்டாகிராம் தான் முக்கியம்!” 6 வயது மகளை கொடூரமாகத் தாக்கிய தாய்..

a0b731de29a02102a95d9e6f66653431a881398c4de4f285d9fe7923c404b3ce

தாயின் செல்போனில் இருந்த செயலிகளைத் தவறுதலாக நீக்கிய 6 வயது சிறுமி, கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கட்டிலில் இருந்து விழுந்ததாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாயின் செயல்பாட்டில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் அளித்த தகவலே இந்தச் சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.


கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஷோபா என்ற பெண், கடந்த 9-ம் தேதி தனது மகளுக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். சிறுமியின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் இருந்ததால், மருத்துவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் காயங்கள் கீழே விழுந்ததால் ஏற்பட்டவை போலத் தெரியாததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், சிறுமி தாக்கப்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிந்தனர்.

தாயின் செல்போனை எடுத்துப் பயன்படுத்திய சிறுமி, அதிலிருந்த வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளைத் தவறுதலாக நீக்கியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த ஷோபா, மரக்கட்டையால் குழந்தையைத் தாக்கியதுடன், தரையிலும் தூக்கி வீசியுள்ளார். இந்தத் தாக்குதலில் சிறுமியின் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

குழந்தை தாக்கப்பட்ட உண்மையை மறைப்பதற்காக, கட்டிலில் இருந்து தவறி விழுந்ததாக ஷோபா கூறியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். சிறுமி இதற்கு முன்பும் தாக்கப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

செல்போனில் இருந்த செயலிகள் நீக்கப்பட்டதற்காகத் தனது மகளையே தாய் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளையும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

Also Read: பாம்புடன் ரீல் எடுக்க முயன்ற இளைஞர்.. இறுதியில் நேர்ந்த சோகம்!

Saranya

Next Post

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை.. 19 வயது கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

Mon Oct 12 , 2026
முழங்கை எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட 19 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையில் மருத்துவத் தவறு நடந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டதால் குரோம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த அர்ஜுன் – சசிகலா தம்பதியரின் மகள் சுபஸ்ரீ. சென்னையில் உள்ள அப்பல்லோ கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் குழந்தையுடன் […]
27531ac12a74b1ba71efef980184e7acbb67499a7a48043eb7379ba7f94103cc

You May Like