தமிழகத்தில் வாரம் 2 நாட்கள் கடன் முகாம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

money 3

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற விரும்புபவர்களுக்கு உதவும் வகையில், வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயம் முதல் வீட்டுவசதி வரை பல்வேறு தேவைகளுக்காகக் கடன் பெற விரும்பும் தகுதியானவர்கள், இந்த முகாம்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.


இதற்காக வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமைகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் வீட்டுவசதிக் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வெள்ளிக்கிழமைகளில் மற்ற முன்னுரிமைத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கான கடன் முகாம்கள் நடைபெறும்.

விவசாயம், ஊரகத் தொழில்கள், கால்நடை வளர்ப்பு, வீட்டு அடமானம், மின் ஆட்டோ வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குக் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திருநங்கைகளுக்கான கடன் திட்டங்களும் இந்த முயற்சியில் இடம்பெற்றுள்ளன. கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து முகாம்களை நடத்த உள்ளன.

கடன் பெற விரும்புவோர் தாங்கள் விண்ணப்பிக்கும் திட்டத்திற்கான தகுதி நிபந்தனைகளை அறிந்துகொண்டு, அதற்குரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்களுடன், விண்ணப்பிக்கும் கடன் வகைக்குத் தேவையான பிற ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

முகாம் நடைபெறும் இடம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடன் திட்டங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள 9884000845 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். தகுதியானவர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிந்து விண்ணப்பிக்கலாம்.

Also Read: 7.7 ரிக்டர் நிலநடுக்கம்.. 900 வீடுகள் சேதம்.. தொடர்ந்து அதிரும் பனாமா! அவசரநிலை அறிவிப்பு…

Saranya

You May Like