தேர்தல் கமிஷனருக்கு எதிராக டெல்லியில் அடங்காத கொந்தளிப்பு! தடையை மீறி ஜந்தர் மந்தரில் புகுந்ததால் பரபரப்பு!

Delhi 2026

தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் ‘சிஜேபி’ (கரப்பான் பூச்சி ஜனதா கட்சி) அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


இதனிடையே, டெல்லியில் தொடரும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில், போராட்டங்களின் முக்கிய மையமான ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று திடீர் தடை விதித்தது. அதற்கு மாற்றாக போராட்டங்கள் நடத்துவதற்காக புதிதாக மூன்று மாற்று இடங்களையும் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த தடை உத்தரவுக்கு சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் தடையை மீறி இன்று ஜந்தர் மந்தர் பகுதிக்குள் தேசிய கொடியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஜேபி அமைப்பை சேர்ந்த சவுரவ் தாஸ், ரங்கா, அஜிங்கியா உள்ளிட்டோரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அபிஜித் தீப்கே, காவல்துறையின் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளால் தங்களது போராட்டத்தை முடக்கிவிட முடியாது என்றும், தேர்தல் ஆணையருக்கு எதிரான தங்களின் நியாயமான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read More : குட் நியூஸ்! வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள்! புதிய அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்!

Next Post

நல்லவேளை எடப்பாடி என்னை நீக்கினார்! அதிமுக கதை முடிந்தது.. 15 பேர் வெளியேற தயார்! அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன பகீர் தகவல்!

Tue Oct 13 , 2026
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடையை முழுநேரக் கடையாக மாற்றி வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசுக்கு 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை மற்றும் நாள் ஒன்றுக்கு 347 கோடி ரூபாய் வட்டி செலுத்தும் நிலை உள்ள சூழலிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், […]
Sengottaiyan 2026

You May Like