ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாயா? என்ன காரணம்? விமர்சனங்களுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த ரிப்ளை!

Nirmal Kumar 2026

தமிழகத்தில் நிலவும் தீவிர மின்தட்டுப்பாட்டை சமாளிக்கவும், தினசரி 2 முதல் 3 மணி நேர மின்தடை ஏற்படுவதைத் தவிர்க்கவுமே வெளிச்சந்தையில் ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என்று மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். மத்திய தொகுப்பில் போதிய மின்சாரம் இல்லாதது மற்றும் வெயிலின் தாக்கம் குறையாததால் வழக்கத்தை விட மின்தேவை பலமடங்கு உயர்ந்துள்ளதே இந்நிலைக்கு முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார்.


குறிப்பாக, என்எல்சி நிறுவனத்தில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய 1,880 மெகாவாட் மின்சாரம் கடந்த மாதத்தில் இருந்து கிடைக்கவில்லை எனவும், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகள் மூலம் வர வேண்டிய 3,500 மெகாவாட்டில் வெறும் 500 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகி 3,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 4,850 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பற்றாக்குறையை ஈடுகட்ட, ஒப்பந்த அடிப்படையில் அறிவிக்கப்பட்ட 3,500 மெகாவாட்டில் தேவைப்படும் 1,500 மெகாவாட் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது என்றும், அக்டோபர் 31 வரை உச்சக்கட்ட மின்தேவை நேரங்களில் (Peak Hours) மட்டும் இது பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தீபாவளி பண்டிகை கால 3 நாட்களுக்கு தடையற்ற மின்விநியோகம் செய்ய தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நீண்டகால மின் ஒப்பந்தங்கள் போடப்படாத காரணத்தினாலேயே தற்போது குறுகிய கால அவசர ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த மாத இறுதிக்குள் புதிய நீண்டகால ஒப்பந்தங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என உறுதி அளித்தார்.

Read More : கோயில்களுக்குள் மொபைல் கொண்டு செல்லலாம்! இதை செய்தால் நடவடிக்கை பாயும்! புதிய தளர்வுகளுடன் அறநிலையத்துறை எச்சரிக்கை!

Next Post

நடுரோட்டில் கணவரின் கழுத்தை நெரித்த மனைவி.. மகளும் சேர்ந்து நடத்திய தாக்குதல்!

Tue Oct 13 , 2026
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு பொதுமக்கள் முன்னிலையில் வன்முறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் கணவரின் கழுத்தைத் துப்பட்டாவால் நெரித்த மனைவியுடன் அவரது மகளும் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகரின் சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை மீறியுள்ளது. ஆத்திரமடைந்த மனைவி, தனது மகளுடன் சேர்ந்து கணவரைத் தாக்கியதுடன், […]
30285bb22471280ad49b9b959f3cef3e6577d0035560f9927a19ef3b07a26dce

You May Like