13 பேர் பலி… சவுதியை அதிரவைத்த ஏவுகணை தாக்குதல்!. ரியாத் விமான நிலையம் மூடல்; விமானங்கள் ரத்து!.

Riyadh airport shut 30kb

ஏமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள ‘கிங் காலித் சர்வதேச விமான நிலையம்’ அக்டோபர் 17-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், நாட்டின் பாதுகாப்பு குறித்தும் பெரும் கவலை எழுந்துள்ளது.


விமானப் பாதுகாப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்பின்படி, அக்டோபர் 17 வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் பரபரப்பான இந்த விமான நிலையம் மூடப்படுவதால், பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்தும், மாற்றுப் பாதைகளில் இயக்கியும் வருகின்றன.

ரியாத் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி, 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து இந்தத் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து சவுதி பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் பல ட்ரோன்களை ஏவிவிட்டு, அதன் தொடர்ச்சியாக குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஹூதிகள் வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திசையை மாற்றிப் பாயும் திறன் கொண்ட இந்த அதிநவீன ஏவுகணைகளை வழிமறிப்பதில் சவுதியின் ‘பேட்ரியாட்’ பாதுகாப்பு அமைப்புகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் நேரடி ராணுவ உதவியை சவுதி அரேபியா எதிர்நோக்கியுள்ளது. இருப்பினும், அமெரிக்காவின் நேரடித் தலையீடு செங்கடல் மற்றும் சர்வதேச கடல்சார் வர்த்தக பாதைகளில் மேலும் பதற்றத்தை அதிகரித்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை பெருமளவில் பாதிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

1newsnationuser5

Next Post

இறுதிச் சடங்குக்கு நடுவே நடந்த ட்விஸ்ட்.. 8 மணி நேரம் சவப்பெட்டிக்குள் இருந்த சிறுமி திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் பரபரப்பு!

Tue Oct 13 , 2026
சவப்பெட்டிக்குள் இருந்து திடீரென எழுந்து தண்ணீர் கேட்ட 15 வயது சிறுமியால், இறுதிச் சடங்குக்காகக் கூடியிருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் குவாத்தமாலாவில் கவனம் பெற்றுள்ளது. மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயங்கி விழுந்த நிலையில், மூச்சு நின்றுவிட்டதாகக் கருதிய குடும்பத்தினர் சிறுமி உயிரிழந்துவிட்டதாக நினைத்துள்ளனர். இதையடுத்து, அவருக்கான இறுதிச் சடங்கு ஏற்பாடுகளையும் தொடங்கியுள்ளனர். சிறுமியின் உடல் […]
6fc01fbba64a2bdbb45539acd01788481d87dd7d6d44f2fe825a10038b611a70

You May Like