கும்பமேளா பேராபத்து!. நதிநீரில் புற்றுநோயை உருவாக்கும் குரோமியம் நச்சு!. 1,000 மடங்கு அதிகமாக கலந்திருப்பதால் அதிர்ச்சி!

Kumbh cancer 30kb

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க கும்பமேளா விழாவிற்கு தயாரிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள நதிநீரில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ‘குரோமியம்’ வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,000 மடங்கு அதிகமாக கலந்திருப்பது ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாசிக்கின் அம்பாத் தொழிற்பேட்டை பகுதிக்கு அருகில் உள்ள நந்தினி நதியிலிருந்து சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், ஒரு லிட்டருக்கு 50.5 மில்லிகிராம் குரோமியம் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 50.3 மில்லிகிராம் அளவுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ‘ஹெக்சாவேலண்ட் குரோமியம்’ (Hexavalent Chromium) உள்ளது. இந்தியத் தர நிர்ணய அமைப்பின் (BIS) விதிகளின்படி, குடிநீரில் குரோமியத்தின் அனுமதிக்கப்பட்ட அளவு லிட்டருக்கு 0.05 மில்லிகிராம் மட்டுமே ஆகும்.

நந்தினி நதியானது, கும்பமேளா விழாவின் போது கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் முதன்மை நதியான கோதாவரியில் சென்று கலக்கிறது. இதனால் தொழிற்பேட்டைக் கழிவுகள் புனித நதியில் கலந்து பக்தர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த அதிர்ச்சி ஆய்வறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அம்பாத் தொழிற்பேட்டை பகுதியில் நதிநீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

ஒரு வாரத்துக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்? லிஸ்டில் உங்க ஊர் இருக்கா?

Tue Oct 13 , 2026
நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை அடுத்த இரு தினங்களில் முழுமையாக விலக உள்ளதாகவும், தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடலோரத்தை ஒட்டி 3.1 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் அங்கிருந்து மத்திய வங்கக்கடல் வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் […]
Rain 2026

You May Like