2 நாட்களாக சாலையில் கிடந்த தந்தையின் உடல்.. உடைகளை வைத்து அடையாளம் கண்ட மகன்!

d5f489cbede5b6557d941233f67301788e12f8f04466dbd6ce396140919dd815

உத்தரப் பிரதேசத்தில் காணாமல் போன 56 வயது முதியவரின் உடல், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு நாட்களாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைப் பணிகள் நடைபெற்ற பகுதியில் உடல் கிடந்ததால், அதனை யாரும் கவனிக்காத நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் உடலின் மீது ஏறிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்மோகன் திவாரி, கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தனது வயலுக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். அவரைத் தேடி வந்த நிலையில், ஜான்சி–கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த உடல் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்ற அவரது மகன் ஆயுஷ்யா, உடலின் நிலை காரணமாக முகத்தை வைத்து அடையாளம் காண முடியாத சூழலில், அருகில் கிடந்த உடைகள் மற்றும் செருப்புகளைக் கொண்டு தனது தந்தை என்பதை உறுதிப்படுத்தினார்.

அந்தப் பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்ததால், சாலையில் கிடந்த உடலை வாகன ஓட்டிகள் கவனிக்காமல் சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜக்மோகன் திவாரியின் மரணத்திற்கான காரணம் என்ன, அவர் சாலையில் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 2031-ல் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்.. இல்லையெனில் ரூ.5,000 கோடியைத் திருப்பித் தர வேண்டும்! எலான் மஸ்க் அதிரடி?

Saranya

Next Post

அந்தரங்க உறுப்பில் மிதித்தார்கள்; கேட்கும் திறனை இழந்த மாணவி!. டெல்லி போலீஸின் அராஜகத்தை போட்டுடைத்த மாணவர்கள்!

Wed Oct 14 , 2026
போராட்டத்தின் போது டெல்லி காவல்துறை தங்களை தாக்கியதாக தேசிய மாணவர் சங்கம் (NSUI) மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெண் போராட்டக்காரர்கள் தாங்கள் எதிர்கொண்ட கொடூரமான அனுபவங்களை கண்ணீருடன் விவரித்தனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட பெண் போராளியை “எங்கள் ஷெர்னி” (சிங்கப் பெண்) என்று வர்ணித்தார். அவர் கடுமையாகத் தாக்கப்பட்ட போதிலும், பயப்படவுமில்லை, அவர் […]
Delhi Police 30kb

You May Like