செம ஜாக்பாட்!. ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு! 78 நாள் ஊதியத்தை போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

railwayemployeesbonus 1758707427 1

இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களின் மிகச்சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், 11,40,770 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தி சார்ந்த போனஸ் (PLB) வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மொத்தம் ரூ. 2,009.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் துர்கா பூஜை மற்றும் தசரா/தீபாவளி பண்டிகைக் காலங்களுக்கு முன்பாக இந்த போனஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 11.40 லட்சம் கெஜட்டட் அல்லாத (Non-Gazetted) ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். தகுதியுள்ள ஒவ்வொரு ரயில்வே ஊழியருக்கும் 78 நாட்களுக்கான போனஸாக அதிகபட்சமாக ரூ. 17,951 வரை கிடைக்கும்.

டிராக் மெயின்டேனர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேனேஜர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் , உதவித் தொழில்நுட்பப் பணியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்கள் இதில் அடங்குவர்.

கடந்த 2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே துறை மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதனை அளவாக 1,670 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. ஒரே ஆண்டில் சுமார் 7.41 பில்லியன் (741 கோடி) பயணிகளை ஏற்றிச் சென்று ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது.

1newsnationuser5

Next Post

ஆயுத பூஜை தொடர் விடுமுறை! சொந்த ஊருக்கு போறீங்களா? தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Wed Oct 14 , 2026
வரவிருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பயண நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை – கோவை வழித்தடத்தில் பயணிகளின் வசதிக்காக 4 சிறப்பு ரயில் சேவைகள் உட்பட நெல்லை, செங்கோட்டை, கொல்லம் ஆகிய வழித்தடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல் […]
train

You May Like