ஆயுத பூஜை தொடர் விடுமுறை! சொந்த ஊருக்கு போறீங்களா? தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

train

வரவிருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் பயண நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை – கோவை வழித்தடத்தில் பயணிகளின் வசதிக்காக 4 சிறப்பு ரயில் சேவைகள் உட்பட நெல்லை, செங்கோட்டை, கொல்லம் ஆகிய வழித்தடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.


சென்னை சென்ட்ரல் – போத்தனூர் வழித்தடம்:

சென்னை சென்ட்ரல் – போத்தனூர்: அக்டோபர் 16 மற்றும் அக்டோபர் 18 ஆகிய தேதிகளில் இரவு 11:55 மணிக்கு புறப்படும்.

போத்தனூர் – சென்னை சென்ட்ரல்: அக்டோபர் 17 அன்று பிற்பகல் 2:00 மணிக்கும், அக்டோபர் 20 அன்று மாலை 6:15 மணிக்கும் புறப்படும்.

தாம்பரம் – நெல்லை (ஈரோடு வழியாக) வழித்தடம்:

தாம்பரம் – நெல்லை: அக்டோபர் 16 அன்று மாலை 4:00 மணிக்கு புறப்படும்.

நெல்லை – தாம்பரம்: அக்டோபர் 20 அன்று இரவு 11:40 மணிக்கு புறப்படும்.

தாம்பரம் – செங்கோட்டை வழித்தடம்:

தாம்பரம் – செங்கோட்டை: அக்டோபர் 19 அன்று இரவு 11:55 மணிக்கு புறப்படும்.

செங்கோட்டை – தாம்பரம்: அக்டோபர் 20 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரல் – கொல்லம் வழித்தடம்:

சென்னை சென்ட்ரல் – கொல்லம்: அக்டோபர் 19 அன்று இரவு 11:50 மணிக்கு புறப்படும்.

கொல்லம் – சென்னை சென்ட்ரல்: அக்டோபர் 20 அன்று மாலை 6:45 மணிக்கு புறப்படும்.

Read More : சுடுகாட்டில் கூட போராட்டம் நடத்த அனுமதி இல்லையா? அப்படினா ஐகோர்ட் முன் அனுமதிக்கலாமா? காவல்துறையை வறுத்தெடுத்த நீதிபதி!

Next Post

"காற்றில் பரவும் நச்சு வாயு; மாஸ்க் போட்டாலும் ஆபத்துதான்"!. எச்சரிக்கும் மருத்துவர்கள்!.

Wed Oct 14 , 2026
ஒவ்வொரு குளிர்காலத்திலும் வட இந்தியாவில் புகைமூட்டம் தீவிரமடையும் போது, N95 மாஸ்க்குகளுக்கான தேவை கடுமையாக அதிகரிக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் உள்ள மருத்துவர்கள் வெளியே செல்லும் போது N95 மாஸ்க் அணியுமாறு தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர். மெல்லிய வடிகட்டி அடுக்கைக் கொண்ட இந்த மாஸ்க் மாசுபட்ட காற்றை நமது நுரையீரலுக்குள் செல்லாமல் தடுத்து பாதுகாக்குமா என்றால், அதைச் சரியாகப் பொருத்திக் கட்டினால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சரியான […]
mask 30kb

You May Like