இனி விமானத்தில் இந்த பவர் பேங்கிற்கு தடை.. பயணிகளே மாடல் நம்பரை செக் பண்ணுங்க!

c0eaf242660714292d3fffec8a69d9d87d35194329bfa2f4398e5e888d4d3da9

இந்தியாவில் இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் குறிப்பிட்ட மாடல் பவர் பேங்கைக் கொண்டு செல்ல விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA தடை விதித்துள்ளது. MOBIKINS MK-PB-04 என்ற மாடல் பவர் பேங்க், இண்டிகோ விமானத்தில் தீ விபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


டெல்லியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம், ஞாயிற்றுக்கிழமை பவர் பேங்க் தொடர்பான தீ விபத்து காரணமாக ஹைதராபாத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பவர் பேங்க் மாடலைப் பயணிகள் கையுடன் எடுத்துச் செல்லவும், சரக்காக விமானத்தில் கொண்டு செல்லவும் அனுமதிக்கக் கூடாது என DGCA உத்தரவிட்டுள்ளது.

DGCA தலைவர் வீர் விக்ரம் யாதவ், தடை செய்யப்பட்ட பவர் பேங்க் விமானங்களில் கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட சாதனத்தை அடையாளம் காண்பது, பயணிகளுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் தடை அனைத்து பவர் பேங்குகளுக்கும் பொருந்தாது. MOBIKINS MK-PB-04 என்ற குறிப்பிட்ட மாடலுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களிடம் உள்ள பவர் பேங்கின் மாடல் எண்ணைச் சரிபார்த்து, விமானப் பயணத்தின்போது அதற்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இதற்கிடையே, லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் பவர் பேங்குகளை விமானத்தில் எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு விதிகளையும் DGCA ஏற்கெனவே கடுமையாக்கியுள்ளது. அதன்படி, பவர் பேங்குகள் மற்றும் கூடுதல் பேட்டரிகளைப் பயணிகள் கைப்பையில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். அவற்றை விமானத்தின் மேல்புறப் பொருள் வைக்கும் பெட்டிகளில் வைக்கக் கூடாது.

மேலும், விமானப் பயணத்தின்போது பவர் பேங்க் மூலம் மொபைல் போன் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான இருக்கைகளில் உள்ள மின்சார இணைப்புகளைப் பயன்படுத்தி பவர் பேங்க் சார்ஜ் செய்வதும் அனுமதிக்கப்படாது.

பேட்டரிகள் தொடர்பான தீ விபத்துகளைச் சமாளிப்பதற்கான பயிற்சிகளை விமானப் பணியாளர்களுக்கு வழங்கவும், பயணிகளுக்கு பாதுகாப்பு விதிகளைத் தெளிவுபடுத்தவும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் மின்னணுச் சாதனம் அதிகமாகச் சூடாகுதல், புகை வெளியேறுதல் அல்லது வழக்கத்திற்கு மாறான வாசனை வீசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், பயணிகள் உடனடியாக விமானப் பணியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகள் சேதமடைந்தாலோ, பழுதடைந்தாலோ அல்லது முறையற்ற வகையில் கையாளப்பட்டாலோ தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும். விமானத்துக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது புகை வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு DGCA இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Also Read: ரயில் பயணிகளுக்கு முக்கிய உத்தரவு.. அக்டோபர் 27 முதல் புதிய மாற்றம்!

Saranya

Next Post

"எனக்கு நீதான் வேணும்!" 96 வயது மூதாட்டியை மணந்த 18 வயது இளைஞர்..

Thu Oct 15 , 2026
96 வயது மூதாட்டியை 18 வயது இளைஞர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் மெக்சிகோவில் பேசுபொருளாகியுள்ளது. மணமக்கள் இருவருக்கும் இடையே 78 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருப்பதுதான் இந்தச் சம்பவத்தின் முக்கியக் கவன ஈர்ப்பாக அமைந்துள்ளது. மெக்சிகோவின் குவிண்டானா ரூ (Quintana Roo) மாகாணத்தில் உள்ள ஒத்தோன் பி. பிளாங்கோ (Othón P. Blanco) நகராட்சியில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் புவியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள திருமணப் […]
ac39f278e911738bc153b0b5a18df39a4be381fc0b7693976d2233aadfb02c67

You May Like